
வார வாரம் ஓடிடி ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்ப்பதில் ரசிகர்கள் அதிகளவு கவனம் செலுத்துகின்றன. வெறும் தமிழுடன் நின்று விடாமல் அனைத்து ஜானர்களிலும் படங்களை கண்டு ரசிக்க முடிவது ஓடிடி தந்திருக்கும் வரம். அந்த வகையில் மே 19 இந்த வாரம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் படங்கள் குறித்து பார்ப்போம்.
வித்தியாசமான டைட்டில் போல கதைத்தளம் வித்தியாசமானது என இயக்குனர் தயாள் பத்மநாபன் கூறியுள்ளார். மகத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். சமீபகாலமாக ஆரவ் வித்தியாசமான திரைக்கதை கொண்ட படங்களில் நடித்து வடுகிறார். அந்த வரிசையில் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் ரசிகர்களையும் கவரும் என நம்பப்படுகிறது. இந்த படத்தை நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.

விமல், அனிதா சம்பத், பால சரவணன் நடித்த நகைச்சுவை படமான தெய்வமச்சான் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த விடுமுறைக்கு குடும்பத்துடன் பார்த்து ரசிக்ககூடிய சிறந்த காமெடி திரைப்படம் தெய்வ மச்சான்.

பேய் படங்களை விரும்புவர்கள் இந்த வாரம் ஸ்பெஷலாக அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளtது பாப் எக்ஸாரிஸ்ட். ஹென்றி என்ற சிறுவனுக்கு பிடித்த பேய்யை ஓட்டுவது தான் இந்த படத்தின் ஒன்லைன். அமேசான் பிரைமில் பாப் எக்ஸாரிஸ்ட் தமிழில் வெளியாகியுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்:இத்தனை நன்மைகளா! யோகாவுக்கு மாறிய தமிழ் நடிகைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com