சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒன்பதாவது சீசனின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் சீனியர் பத்தாவது சீசனிற்கு தயாராகி விட்டது விஜய் தொலைக்காட்சி. இதற்கான ஆடிஷன்கள் ஏற்கனவே நடைபெற்று வரும் 16ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் எபிசோட் ஒளிபரப்பாகிறது.
தமிழ் தொலைக்காட்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரும்பாலான நபர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். 2007ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சூப்பர் சிங்கர் சீனியர், சூப்பர் சிங்கர் ஜூனியர் என இரண்டிலும் தலா ஒன்பது சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன.
அண்மையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஒன்பதாவது சீசனின் இறுதிப்போட்டியில் ஸ்ரீநிதா மகுடம் சூடினார். ஹர்ஷினி நேத்ராவுக்கு முதல் ரன்னர் அப் கோப்பையும், அக்ஷரா லட்சுமிக்கு இரண்டாவது ரன்னர் அப் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் சீனியர் பத்தாவது சீசன் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. பாடகர்கள் சுஜாதா மோகன், மனோ, அனுராதா, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்படவுள்ளனர்.
மேலும் படிங்க Super Singer 9 Winner : ரூ.60 லட்சம் தட்டிச் சென்ற ஸ்ரீநிதா
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்தாவது சீசனின் தொடக்க விழா புரோமோவில் 25 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர்களின் முன்னணி மேடையின் மாபெரும் துவக்கம் என புரோமோவில் வாசகம் இடம்பெற்றுள்ளது.
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு பிடித்தமான பாடலைப் பாடி அசத்தியுள்ளனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக்கும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com