மிக பிரமாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஒன்பதாவது சீசனின் இறுதிப்போட்டியில் ஸ்ரீநிதா மகுடம் சூடியுள்ளார். ஹர்ஷினி நேத்ராவுக்கு முதல் ரன்னர் அப் கோப்பையும், அக்ஷரா லட்சுமிக்கு இரண்டாவது ரன்னர் அப் கோப்பையும் வழங்கப்பட்டது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒன்பதாவது சீசனின் இறுதிப்போட்டி நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நிலையில் இறுதிப்போட்டிக்கு ஆறு போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.
சீசன் 9 வெற்றியாளர்
சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒன்பதாவது சீசனின் வெற்றியாளராக ஸ்ரீநிதா அறிவிக்கபட்டார். தனியார் தொலைக்காட்சி அறிவித்தபடி அவருக்கு ஒன்பதாவது சீசனின் வெற்றியாளருக்கான கோப்பையும், 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
சீசன் 9 ரன்னர் அப்
ஸ்ரீநிதாவுக்கு கடும் சவால் அளித்த ஹர்ஷினி நேத்ராவுக்கு முதல் ரன்னர் அப் விருது வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்த அக்ஷரா லட்சுமிக்கு இரண்டாம் ரன்னர் அப் விருது கிடைத்தது.
மேலும் படிங்கஆக்ஷன் அதிரடி நிறைந்த “டாக்ஸிக்” ! டைட்டில் அறிவிப்பில் இதை கவனித்தீர்களா ?
இறுதிப்போட்டியாளர்கள்
ஜூலையில் நிகழ்ச்சி தொடங்கியபோது 20 திறன் வாய்ந்த ஜூனியர் போட்டியாளர்கள் இருந்தனர். இதில் அக்ஷரா லட்சுமி, அனன்யா, ஹர்ஷினி நேத்ரா, மேக்னா சுமேஷ், ஸ்ரீநிதா, ரிச்சா சஜான் என ஆறு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
சீசன் 9 நீதிபதிகள்
சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒன்பதாவது சீசனின் இறுதிப்போட்டிக்கான நீதிபதிகளாகப் பின்னணி பாடகர்கள் கே.எஸ்.சித்ரா, அந்தோனி தாஸன் மற்றும் தமன் ஆகியோர் செயல்பட்டனர். இறுதிப்போட்டியின் வெற்றியாளர் நேரலை வாக்களிப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாக்களிப்பு முறை
சூப்பர் சிங்கர் ஜூனியரில் உங்களுக்குப் பிடித்தமான போட்டியாளரை வெற்றி பெறச் செய்ய இரண்டு வாக்களிப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மேலும் படிங்கTop 10 Theatrical Movies : ஐ.எம்.டி.பி டாப் 10 படங்களில் ஜெயிலர், லியோ
ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒதுக்கப்பட்ட செல்போன் எண்களில் நேயர்கள் மிஸ்டு கால் முறையில் வாக்கு செலுத்தலாம். இரண்டாவது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வாக்களிப்பது. தளத்தில் இடம்பெற்றிருக்கும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளருக்கு ஒரு ஐடியில் இருந்து அதிகபட்சமாக 180 வாக்குகள் வரை செலுத்தலாம். இறுதிப்போட்டியை தற்போதும் நீங்கள் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation