பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த துயரமான அல்லது மோசமான சம்பவத்தை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில் இந்த சீசன் போட்டியாளர்களும் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டனர். இதில் நடிகை விசித்ரா கூறிய விஷயங்கள் பூதாகரமாகியுள்ளது.
உண்மையை உடைத்து பேசிய விசித்ரா
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காக மலம்புழா சென்றேன். அப்போது பாலக்காட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் படக்குழுவை சேர்ந்த அனைவரும் தங்கியிருந்தனர். படத்தின் ஹீரோவை சந்தித்த போது, என்னுடைய பெயரைக் கூட கேட்காமல் படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டார். ஆம் என்று பதிலளித்தேன். வேறு எதுவும் பேசாமல் தன்னுடைய அறைக்கு என்னை அழைத்தார். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அதன்பிறகு எதையும் யோசிக்காமல் என்னுடைய அறைக்கு சென்று தூங்கிவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு தினந்தோறும் தொல்லைகள் வர ஆரம்பித்தன. படப்பிடிப்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. படப்பிடிப்பில் என்னுடைய காட்சியை தாமதப்படுத்திக் கொண்டே இருந்தனர். தமிழ் திரையுலகில் இதுபோன்ற பிரச்சினைகளை நான் சந்திக்கவில்லை.
Popular Actress and Tamil Biggboss S7 Contestant #Vichitra shares her shocking and personal bitter experience while shooting for her Tamil film years ago!#BiggBossTamil7#BiggBossTamil#Vichithra#MeToo@Chinmayipic.twitter.com/1RJimK0sag
— Akshay (@Filmophile_Man) November 21, 2023
தினமும் படப்பிடிப்பு முடிந்த பிறகு மாலை 6 மணியளவில் மது அருந்திவிட்டு எனது அறையை தட்டிக்கொண்டே இருப்பார்கள். மிகவும் சிரமமாக இருந்தது. எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டே இருந்தேன். வேலைக்காக இங்கே வந்திருக்கிறோம், அதை முடித்துவிட்டு கிளம்ப வேண்டும் என நினைத்தேன். எனது அறைக்கு தொலைபேசி மூலம் அழைப்புகளை தவிர்த்தேன். படப்பிடிப்பு முழுவதும் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது.
மேலும் படிங்கபிக்பாஸ் சீசன் 7 வீட்டில் பூகம்பம் டாஸ்க் அதிரும் ஹவுஸ்மேட்ஸ்
ஹோட்டல் மேனேஜரிடம் என்னுடைய பிரச்சினையை கூறினேன். ஒவ்வொரு நாளும் வெவ்வெறு அறைகளில் தங்குவதற்கு உதவினார். அப்போதும் அந்த அறையை தினமும் 3-4 பேர் தட்டிக் கொண்டே இருந்தனர். மிகவும் அசிங்கமாக இருந்தது. எப்படி இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்று தெரியாமல் தவித்தேன். எனது செயலால் அவர்கள் மிகவும் எரிச்சல் அடைந்தனர். எனக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என காத்திருந்தனர்.
சில நாட்கள் கழித்து காட்டுக்குள் படப்பிடிப்பு நடைபெற்றது. கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். கூட்டத்தில் கலவரம் நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கேயும் இங்கேயும் ஓட வேண்டும். அச்சமயத்தில் யாரோ ஒருவன் என்னை தவறான எண்ணத்தில் தொடுவதை உணர்ந்தேன். முதலில் தெரியாமல் நடந்திருக்க கூடும் என நினைத்தேன்.
ஆனால் அடுத்த டேக் செல்லும் போதும் தகாத தொடுதலை உணர்ந்தேன். மூன்றாவது டேக்கில் அந்த நபரின் கையை பிடித்துவிட்டேன். அவனை வெளியே இழுத்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் அழைத்து சென்று தவறான எண்ணத்தில் தொடுகிறான் என்று கூறினேன். ஹீரோ, ஹீரோயின், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பலரும் அங்கிருந்தனர். அடுத்த நிமிடம் எனது கண்ணத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பளார் என அறைந்தார். திகைத்து போய் நின்றேன்.
மேலும் படிங்கதிரிஷாவை மீண்டும் வம்பிழுக்கும் மன்சூர்
யாராவது என்னிடம் வந்து பேசுவார்கள் அல்லது உதவுவார்கள் என எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. படப்பிடிப்பு தளத்தை விட்டு அழுதுகொண்டே வெளியேறினேன். விசித்ராவின் மோசமான கதையை கேட்டு சகபோட்டியாளர்கள் மனம் உடைந்தனர்.
#Vichitra refers to this scene in #BiggBossTamil7 👍pic.twitter.com/H0yI5U9UC9
— VCD (@VCDtweets) November 22, 2023
இந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவியது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஒருவர் விசித்ரா கூறிய சம்பவம் எந்த படத்தில் நடந்தது என்பதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். விசித்ரா அளித்த புகார் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியையும் சிலர் பதிவிட்டுள்ளனர். அப்படம் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பலேவடிவி வாசு எனத் தெரியவந்துள்ளது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation