
சினிமாவில் நடிகைகளுக்கு நிறம் குறித்த விமர்சனம் இன்னும் இருக்க தான் செய்கிறது. என்னதான் டஸ்கி ஸ்கின் டோன் நடிகைகள் கடினமான உழைப்பால் மேலே வந்து பிரபலங்களாக மாறினாலும் அவர்களின் நிறமானது எல்லா நேரத்திலும் எதாவது ஒரு விஷயத்தில் விமர்சனமாக முன் வைக்கப்படுகிறது. நடிகைகள் என்றால் கலராக, ஸ்லிம்மாக, அழகான முடியுடன் தான் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு பல காலமாக இருந்து வருகின்றன. சமீபகாலமாக அந்த கருத்தை பல நடிகைகள் மாற்றி எழுதி வருகின்றனர். அதில் சுந்தரி சீரியல் கேப்ரில்லாவும் ஒருவர்.
டிக் டாக் மூலம் தனது பயணத்தை தொடங்கிய கேப்ரில்லா இன்று அடைந்திருக்கும் உயரம் மிக மிக பெரியது. ஆனால் இதை அடைய அவர் சந்தித்த கஷ்டங்களும் ஏராளம். அவமானங்களை வெகுமானங்களாக மாற்றி இன்று சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கேப்ரில்லா.
இந்த பதிவும் உதவலாம்:பேலியோ டயட்டால் உயிரிழந்த பிரபல நடிகரின் மனைவி
கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார் கேப்ரில்லா. அந்த நிகழ்ச்சியில் ஆங்கர் டிடி போல் சிரித்து காட்டி பலரின் கவனத்தையும் பெற்றார். அதன் பின்பு டிக் டாக்கில் வீடியோ போட தொடங்கியவர் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் பற்றி பேசி டிக் டாக் செய்தார். அது பட்டித்தொட்டி எங்கும் வைரலானது. பின்பு சின்னத்திரையில் வாய்ப்பு தேடி பல சேனல்களில் ஏறி இறங்கினார்.

நிறத்தை காரணம் காட்டி பல இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கேப்ரில்லா பல மேடைகளில் பதிவு செய்தார். அப்போது தான் கேப்ரில்லாவின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பாக ஐரா படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்க கேப்ரில்லாவுக்கு அழைப்பு வந்ததது. நம்பிக்கையுடன் நடித்தார். அதன் பின்பு அவரின் நடிப்புக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு கொடுக்க, அவரை லீட் ரோலில் நடிக்க வைத்து சுந்தரி என்ற சீரியலை சன் டிவி களமிறக்கியது. இப்போது சுந்தரி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை வெள்ளித்திரையிலும் கேப்ரில்லாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. இந்த சீரியலுக்காக சன் குடும்பம் உள்ளிட்ட பல விருதுகளையும் கேப்ரில்லா வாங்கி குவித்து விட்டார்.

இதையெல்லாம் தாண்டி கேப்ரில்லா மிகப் பெரிய பெருமையாக நினைப்பவது அவரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இன்ஸ்டாவில் பின் தொடர்வதை. இதை மிகுந்த மகிழ்ச்சியுடன் கேப்ரில்லா இன்ஸ்டாவிலும் ஷேர் செய்து இருந்தார். தன்னை போல் இன்னும் பல திறமையுள்ள நடிகைகள் இந்த சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என கேப்ரில்லா குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்:நடிகை அனுஷ்காவை தாக்கிய சிரிப்பு நோய்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com