
நம் பாரம்பரியத்தில் வெங்காயம் ஒரு முக்கிய உணவு பொருளாகும். இது பல உணவுகளுக்கு சுவை சேர்க்கிறது. இதில் சல்பர், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை இரத்த குழாய்களை சுத்தம் செய்யவும், கொழுப்பை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
மேலும் படிக்க: Bone health: எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 வகை உணவுகள்; அளவுடன் சாப்பிட்டால் ஆபத்து இல்லை!
எனினும், வெங்காயத்தை சமைக்காமல் அப்படியே சாப்பிடும் போது ஒரு விதமான வாசனை உருவாகும். இதனால் வெங்காயத்தை அவ்வாறு சாப்பிடுவதை பலரும் தவிர்த்து விடுகின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் பின்பற்றக் கூடிய சில எளிமையான குறிப்புகளை இதில் பார்க்கலாம்.
வெங்காயத்தை சாப்பிடுவதற்கு முன், அதனை எலுமிச்சை சாறில் ஊற வைப்பது வாய் துர்நாற்றத்தை குறைப்பதற்கான ஒரு எளிய தீர்வு. எலுமிச்சை, வெங்காயத்தில் உள்ள துர்நாற்றத்தை உண்டாக்கும் சேர்மங்களை நடுநிலைப்படுத்துகிறது. இந்த செயல்முறை விரைவானது, பயனுள்ளது மற்றும் எளிதாக பின்பற்றக்கூடியது ஆகும்.

மேலும் படிக்க: Badam pisin benefits: எலும்புகளை பலப்படுத்துவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை; பாதாம் பிசின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட நேர்ந்தால், ஒரு தேக்கரண்டி சோம்பு மெல்லுவது வாய் துர்நாற்றத்தை போக்க உதவும். இது வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும், உமிழ்நீர் உற்பத்தியை தூண்டி செரிமானத்திற்கும் உதவுகிறது.

வெங்காயம் சாப்பிட்ட பிறகு ஏலக்காய் மெல்லுவது உடனடியாக வாய் துர்நாற்றத்தை நீக்கும். ஏலக்காயின் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகள் சுவாசத்தை தூய்மையாக்கி, செரிமான அமைப்பையும் சரிசெய்கிறது. இதன் மூலம் வாய் புத்துணர்ச்சி எளிதாக கிடைக்கிறது.
இந்த எளிய தீர்வுகளை பின்பற்றுவதன் மூலம், வெங்காயத்தால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை பற்றிய பயம் இல்லாமல் சாப்பிடலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com