herzindagi
image

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைக்க உதவும் எளிய குறிப்புகள்

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவும் சில எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் காணலாம். உங்கள் அன்றாட மருந்துகளுடன் இந்த செயல்முறையை பின்பற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
Editorial
Updated:- 2025-11-22, 11:19 IST

உயர் இரத்த அழுத்தம் என்பது இன்று பலரை பாதிக்கும் ஒரு சுகாதார பிரச்சனையாகும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதன்படி, இயற்கையான வழிகளில் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகளை பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க வேண்டும்:

 

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று உடல் எடையை குறைப்பது தான். உங்கள் உடல் எடையில் சிறிது கவனம் செலுத்தினால் கூட, அது உங்கள் இரத்த அழுத்தத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். வெறும் 3 முதல் 5 கிலோ எடையை குறைப்பது கூட உங்கள் இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க உதவும்.

 

ஆரோக்கியமான உணவு முறை:

 

உங்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். மேலும், கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள உணவுகளை தேர்வு செய்யுங்கள். இந்த உணவு பழக்கம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

Hypertension

 

மேலும் படிக்க: சிறுநீர்ப்பாதை தொற்றை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்திய முறைகள்; இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்

 

உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்:

 

இரத்த அழுத்தத்தை குறைக்க விரும்பினால், உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இதை தவிர்ப்பதற்கான வழியே இல்லை. தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய இலக்கு நிர்ணயித்து கொள்ளுங்கள். வேகமாக நடப்பது, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற மிதமான செயல்பாடுகளை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: எண்ணெய் தேய்த்து குளிப்பதன் அற்புத பயன்கள்; சரும பாதுகாப்புக்கான ரகசியம் இதோ!

 

உப்பு உட்கொள்ளலைக் குறைத்தல்:

 

உங்கள் உணவில் உள்ள உப்பின் அளவைக் குறைப்பது இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்கும். ஒரு நாளைக்கு 2,300 மில்லி கிராமுக்கு குறைவாக உப்பு எடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இது 1,500 மில்லி கிராம் அளவில் இருப்பது மிகவும் நல்லது.

Salt

 

காபி அருந்துவதை குறைக்க வேண்டும்:

 

காபி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்றதல்ல. காஃபின் இரத்த அழுத்தத்தில் தற்காலிக உயர்வை ஏற்படுத்தலாம். எனவே, காபி உட்கொள்வதை ஒரு அளவோடு வைத்துக் கொள்வது நல்லது.

 

தூக்கத்தின் அவசியம்:

 

ஒவ்வொரு இரவும் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது. தினமும் இரவில் 7 முதல் 9 மணி நேரம் தரமான உறக்கம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் இரத்த அழுத்த அளவை சரியாக நிர்வகிக்க உதவும்.

 

இந்த எளிய, இயற்கையான குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதைத் தவிர, உங்களுக்கு ஏதேனும் மருத்துவ ரீதியான பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். மேலும், இந்த நடைமுறைகளை மருந்துகளுக்கு மாற்றாக மேற்கொள்ளக் கூடாது. மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் பின்பற்றலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com