Madharaasi movie twitter review: ரசிகர்களை ஈர்த்ததா சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸின் கூட்டணி? மதராஸி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்

Madharaasi movie twitter review: சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸின் கூட்டணியில் இன்று வெளியான மதராஸி திரைப்படம் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனம் கூறி வருகின்றனர். அந்த வகையில் பார்வையாளர்களை கவர்ந்ததா மதராஸி திரைப்படம்?
image
image

Madharaasi movie twitter review: சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த, வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடிப்பில், அனிருத் இசையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஏறத்தாழ ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு இருந்தது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் மதராஸி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் தோல்வி அடைந்ததால், இப்படம் முருகதாஸின் கம்பேக்காக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

Madharaasi Movie

இந்நிலையில், இன்று வெளியான மதராஸி திரைப்படம் தொடர்பாக ட்விட்டர் (எக்ஸ் தளத்தில்) தளத்தில் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கூறுகின்றனர். குறிப்பாக, படத்தின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: Hridayapoorvam twitter review: ஹிருதயபூர்வம் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்; நகைச்சுவையில் கலக்கி இருப்பதாக ரசிகர்கள் கருத்து

அதன்படி, "சுவாரஸ்யமான கதைக்களத்துடன் திரைப்படம் தொடங்குகிறது. காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைத்தாலும், இடைவேளைக்கு முன் மீண்டும் வேகம் எடுக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி முழுவதும் எந்தவித இலக்குமற்று நகர்கிறது. படம் மெதுவாக நகர்வதால், சோர்வாகவும் உணர வைக்கிறது.

Madharaasi Review

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் ஒரு புதிய கதையுடன் வந்தாலும், அதை செயல்படுத்துவதில் தடுமாறுகிறார். சிவகார்த்திகேயன் மற்றும் துணை நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தனர். அனிருத்தின் இசை ஒரு பெரிய ஏமாற்றம். பாடல்கள் ஈர்க்கவில்லை, பின்னணி இசை திரும்ப திரும்ப வருவதாக தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் தயாரிப்பு தனித்து நிற்கின்றன. தனித்துவமான கதைக்களம் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்த தவறிய மற்றொரு திரைப்படம்" என வெங்கி ரிவியூஸ் என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இது தவிர ரமேஷ் பாலா என்ற பதிவர், "முருகதாஸ் தனது பழைய பாணியில் திரைக்கதை அமைத்துள்ளார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனின் ஆக்‌ஷன் அவதாரம் சிறப்பாக உள்ளது. அனிருத்தின் இசையும் படத்தில் சிறப்பாக உள்ளது. இந்த மூவரும் இணைந்து நல்ல பொழுதுபோக்கு படத்தை வழங்கியுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஆக்‌ஷன் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு மதராஸி திரைப்படம் நிச்சயம் விருந்தாக அமையும். சிவகார்த்திகேயன் மற்றும் வித்யூத் ஜம்வால் ஆகியோரின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன" என்று லக்‌ஷ்மி காந்த் என்பவர் பதிவிட்டுள்ளார். அந்த வகையில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை காட்டிலும் மதராஸியில் ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Twitter

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP