சென்னையில் உள்ள பெரம்பூரில் பிரபல அடகுக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் சின்னத்திரையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகவும், சில உள்ளூர் விளம்பரங்களிலும் நடித்து வந்த மகாலட்சுமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு மகாலட்சுமி பெரம்பூரில் இருக்கும் அடகுக்கடையில் தாலி செயினை அடகு வைத்துள்ளார். அப்போது, உரிமையாளர் செயினை உரசி பார்க்க முயன்ற போது தாலியை உரசக்கூடாது என சென்டிமெண்டாக பேசி இருக்கிறார். அதை கேட்ட உரிமையாளரும் அவரை நம்பி நகைக்கான பணத்தை கொடுத்து இருக்கிறார்.
அவர் அடமானம் வைத்த தொகை ரூ. 40, 000. இதற்காக அவரிடம் நகைக்கடை உரிமையாளர் ஆதார் நகல் கேட்டுள்ளார். மகாலட்சுமி ஆதார் கார்டு நகலை எடுத்து வர மறந்ததாக கூறி வெறும் ரூ. 20,000 மட்டும் வாங்கி கொண்டு மீது பணத்தை நாளை வந்து வாங்கி செல்வதாக கூறியிருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்:பெண் என்பதால் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிராகரிக்கப்பட்டாரா?
பின்பு, உரிமையாளர் சிலமணி நேரம் கழித்து, மகாலட்சுமி கொடுத்த செயினை உரசி பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அது கடைகளில் விற்கும் போலி நகை என்பது தெரிய வந்தது. உடனே பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் , காவல் துறையினர் கடையின் சிசிடிவி காட்சிகளை செக் செய்தனர். அந்த பெண்ணின் வீடியோவை வாட்ஸப் குரூப்பிலும் பகிர்ந்தனர். அப்போது தான் மகாலட்சுமி போலி நகைகளை வைத்து இதுப்போல் பல கடைகளில் மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் மகாலட்சுமியை சென்னை கீழ்ப்பாக்கத்தில் கைது செய்தனர். அவர் தனது மகனுக்காகவும், அவரின் படிப்பு செலவுக்காக இதுப்போல் மோசடியில் ஈடுப்பட்டதை ஒத்துக்கொண்டுள்ளார். இவர் சன் டிவி, ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் துணை நடிகையாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவும் உதவலாம்: மருத்துவ மாணவி ப்ரீத்தி தற்கொலை.. சீனியர் மாணவன் கைது! உண்மை என்ன?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation