பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை செய்து, தடம் பதித்தாலும் அவர்களை கொண்டாட பலரும் மறந்து விடுகிறோம். இதில் ஒருசிலர் விதிவிலக்கு. சினிமாவில் இந்த பிரச்சனை இல்லை. ஒரு படத்தில் அவர்கள் முகம் வெளியில் தெரிந்து விட்டால் போதும், அடுத்த நாளே அவர்கள் செலபிரிட்டி தான். ஆனால் விளையாட்டு, தற்காப்பு கலை, அறிவியல் போன்ற அதிகம் வெளியில் தெரியாத துறைகளில் பல சாதனைகள் புரியும் பெண்களின் பெயர்கள் கூட வெளியில் தெரிவதில்லை, அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது கூட கடைசி வரை பலருக்கும் தெரியாமலே போகிறது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆசிய கோப்பை தொடங்கி டி 20 , ஒருநாள் தொடர்களில் பல சாதனைகளை செய்துள்ளார். அதுவரை ஆண்கள் ஆடும் இந்தியன் கிரிக்கெட்டை பார்த்து ரசித்து கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் கூட, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா வருகைக்கு பின்பு பெண்கள் கிரிக்கெட்டையும் விசில் அடித்து ரசிக்க தொடங்கினர்.
இந்த பதிவும் உதவலாம்:குடும்பம் பற்றி `அயலி’ வெப் சீரியஸ் எழுப்பிய கேள்விகள்
இருப்பினும் அவர்களுக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை சமீபத்திய சம்பவம் உணர்த்துகிறது. தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை சர்வதேச டி20 தொடர்களில் ரோகித் சர்மா, 148 முறை விளையாடி இருக்கிறார். ஆனால் தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் பெண்களுக்கான 'டி-20 ' உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் 150வது முறையாக களம் இறங்கி ரோகித் சர்மா சாதனையை முறியடித்துள்ளார்.
அதுமட்டுமில்லை, இவரின் தலைமையில் விளையாடி வரும் இந்திய மகளிர் அணி, ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. இப்படி பல வெற்றி மகுடங்களை சூடி வரும் கேப்டன், ஹர்மன்பிரீத் கவுர் பெயர் கூகுள் தேடலில் வரவில்லை என்பதை மிகுந்த வறுத்தத்துடன் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதாவது, கூகுளில் இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று தேடினால், ரோகித் சர்மா மற்றும் ஹர்த்திக் பாண்டியா பெயர்கள் மட்டுமே வருகின்றன. ஹர்மன்பிரீத் கவுரின் பெயர் எங்கே? இவ்வளவு சாதனைகளை செய்தும் ஹர்மன்பிரீத் கவுர் பெயர் வராததை யுவராஜ் சிங் சுட்டி காட்டியுள்ளார். அதுமட்டுமில்லை, ”இதை ஆரம்பித்து வைத்தது நாம் தான், இப்போது இதை நாமே திருத்த வேண்டும்” எனவும் கூறியுள்ளார். ”கிரிக்கெட்டில் ஆண்களின் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை கொண்டாடிய நாம், பெண்கள் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிட்டோம். தவறை திருத்தி கொள்ளும் நேரமிது” எனவும் யுவராஜ் சிங் தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதுப்போல் பல துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் பெண்களின் வெற்றியும் இந்த சமூகத்தில் கொண்டாடப்பட வேண்டிய அவசியத்தை யுவராஜ் சிங்கின் இந்த பதிவு சுட்டி காட்டுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்:வாட்சப் தகவல்களை திருடுவது யார்? கங்கனா ரனாவத்துக்கு என்ன பிரச்னை?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google