
தெலுங்கானா மாநிலம் வராங்கல் மாவட்டத்தில் உள்ளது காக்கத்தீயா மருத்துவக் கல்லூரி. இங்கு முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ப்ரீத்தி கடந்த வாரம் தற்கொலை முயற்சி செய்தார். மயக்க மருந்தான அனஸ்தீசியாவை ஊசி மூலம் அதிகளவு உடம்பில் செலுத்தி கொண்டு ப்ரீத்தி தற்கொலை முயற்சி செய்தாக கூறப்படுகிறது. பரீத்தி மயக்க அடைந்ததை கண்ட மாணவ, மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். ப்ரீத்தியின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தெலுங்கானா போலீசார் இதுக் குறித்த விசாரணையில் இறங்கினார். கல்லூரி, ப்ரீத்தியின் நண்பர்கள், குடும்பத்தாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவான சயிஃப் என்பவர், ப்ரீத்தியை ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. அதே போல் ப்ரீத்தியை அவர் பலமுறை தகாத வார்த்தையால் திட்டியதாகவும், ஜாதியை பற்றி தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுக் குறித்து ப்ரீத்தி தனது பெற்றோரிடமும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்:பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
கல்லூரி நிர்வாகமும் இதுக் குறித்து விசாரிப்பதற்காக இருதரப்பையும் அழைத்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி ப்ரீத்தி தற்கொலை முயற்சி செய்தார். கடந்த 5 நாட்களாக அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீத்தியின் தற்கொலைக்கு ராக்கிங் கொடுமை மற்றும் சயிஃப் தான் காரணம் என பரீத்தியின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ப்ரீத்தியின் உடலை வாங்கவும் குடும்பத்தார் மறுப்பு தெரிவித்தனர். தனது மகளுக்கு நீதி கேட்டு அவர்கள் போராட்டத்திலும் குதித்தனர். பின்பு, அரசு தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ப்ரீத்தி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயிஃப் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேர , சயிஃப் இந்த குற்றச்சாட்டை மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ராக்கிங் செய்தது உண்மைதான், ஆனால் அவரை திட்டியது வேலை தொடர்பாக தான் எனவும் கூறியுள்ளார். ப்ரீத்தியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ப்ரீத்தியின் இந்த தற்கொலை விவகாரம், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவிக்கு நீதி கேட்டு, அவருக்கு ஆதரவாக #justiceforpreethiஹேஸ்டேக்குகளும் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik, google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com