
ஒவ்வொரு வாரமும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புது திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போல தொடர்ந்து ஓடிடியில் ஏராளமான திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஆஹா, நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி அவரே நடித்த திரைப்படம் கடைசி உலகப் போர். கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசான இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியான் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் அக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விஜய்சேதுபதி திரிஷா நடித்த 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் மெய்யழகன். இது ஒரு பீல் குட் திரைப்படம் என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
மேலும் படிக்க: லப்பர் பந்து OTT: தீபாவளிக்கு ரிலீசாகும் லப்பர் பந்து, எங்கு எப்போது பார்க்கலாம்?

நடிகை தேவதர்ஷினி, தன்ஷிகா, மேத்யூ வர்கீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'ஐந்தாம் வேதம்'. திரைப்படங்களில் நீண்ட காலம் நடிக்காமல் இருந்து வந்த தன்ஷிகா, தற்போது ஹாரர் வெப் சீரிஸ் மூலம் அதிரடியாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 90களின் சூப்பர் ஹிட் திரில்லர் சீரிஸான 'மர்மதேசம்' மூலம் புகழ் பெற்ற இயக்குநர் நாகா இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த தொடர் அக்டோபர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, பிரபல யுடியூபர் பிரிகிடா சகா, ஏகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த படம் அக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com