
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் கோலிவுட் சினிமாவில் 2024 ஆண்டின் வெற்றிகரமான படமாக மாறியுள்ளது. கம்மி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம் ஆரம்பத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் பல திரையரங்கில் இன்றும் லப்பர் பந்து படம் ஓடிக்கொண்டிருப்பதால் ஓடிடி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது லப்பர் பந்து திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் எப்போதும் விளையாட்டு போட்டிகளை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு பொதுவாகவே நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வரிசையில் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் லப்பர் பந்து. இந்த படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கி இருக்கிறார். இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இதற்கு முன்னதாக நெஞ்சுக்கு நீதி, எப்.ஐ.ஆர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் பெரிய ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக அமைந்துள்ளது என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த படத்தின் நாயகன் அட்டக்கத்தி தினேஷ் உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரர் ஆக இருந்து வருகிறார். எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் தவறாமல் ஆஜராகிவிடுவார். அதே ஊரில் பந்துவீச்சில் கதாநாயகனை திணறடிக்கும் மற்றொரு கிரிக்கெட் வீரர் ஹரிஷ் கல்யாண். இதனால் இவர்கள் இருவருக்கும் ஈகோ வளர்கிறது. ரப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும் காலத்தில் தொடங்கும் இந்த கதை, 55 ரூபாய்க்கு ரப்பர் பந்து விற்கும்போது முடிகிறது.

கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், கிராமங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன அலப்பறைகள் நடைபெறும் என்பதை அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் தமிழரசு பச்சைமுத்து. கிரிக்கெட், காதல், சாதிய பாகுபாடு என இரண்டரை மணி நேரத்தில் வெரைட்டியான சிக்ஸர்களை விளாசியுள்ளது இந்த லப்பர் பந்து.
மேலும் படிக்க: 2024 தீபாவளி ரிலீஸ்: திரையில் மோதும் மாஸ் நடிகர்கள், ரிலீஸாகும் தமிழ் படங்கள் இதோ!
இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பாக சிம்ப்ளி சவுத் ட்விட்டர் தளத்தில், "லப்பர் பந்து இன்னும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வருவதால், நாங்கள் அதன் ஸ்ட்ரீமிங் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். புதிய ஸ்ட்ரீமிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் லப்பர் பந்து படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com