ஓணம் பண்டிகையை முன்னிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழக் கூடிய வகையில் இந்தக் கட்டுரையில் தமிழில் வாழ்த்து செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் பிரியத்துக்குரியவர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
மேலும் படிக்க: Onam pookolam 2025: அழகான ஓணம் பூக்கோலம் அலங்கார யோசனைகள்
ஓணம் பண்டிகை:
கேரள மக்கள் பெரிதும் கொண்டாடும் பண்டிகையாக ஓணம் திகழ்கிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, நடப்பு ஆண்டில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, இன்றைய தினம் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் பலரும் புத்தாடை உடுத்தி தங்கள் மனதிற்கு பிடித்த வகையில் கொண்டாடுகின்றனர்.
மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாள் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பலரும் மகாபலி மன்னனை போன்று வேடமணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இது மட்டுமின்றி ஓணத்திற்கு பெயர் பெற்ற சத்யா விருந்து படைத்து தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து உணவருந்தி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
கேரள மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டிலும் பலர் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் ஓணம் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதற்காக பாரம்பரிய உடை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க: Onam 2025: தேதி, வரலாறு, முக்கியத்துவம், சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் குறித்த முழு விபரம்
ஓணம் வாழ்த்துகள்:
இந்த சிறப்பு மிக்க நாளில் உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழும் வகையில் வாழ்த்து செய்திகள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் பாசத்துக்குரியவர்களுக்கு அனுப்பி ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள்.
1. ஓணம் 2025 நல்வாழ்த்துகள்! இந்த அறுவடை திருவிழா உங்கள் வீட்டில் செழிப்பையும், மகிழ்ச்சியையும், முடிவில்லா ஆசீர்வாதங்களையும் கொண்டு வரட்டும்.
2. மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை நிறைந்த ஒரு வண்ணமயமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஓணம் உங்களுக்கு அமைய வாழ்த்துகள்.
3. இந்த ஓணத்தன்று, மகாபலி மன்னர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும்.
4. ஓணம் நல்வாழ்த்துகள்! உங்கள் இதயம் பூக்கோலம் போல பிரகாசமாகவும், உங்கள் வாழ்க்கை ஓணம் சத்யா போல மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.
5. இந்த ஓணம், உங்கள் வாழ்க்கையை அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியின் துடிப்பான வண்ணங்களால் நிரப்பட்டும்.
6. ஓணம் என்பது பூக்களையும் விருந்துகளையும் பற்றியது மட்டுமல்ல, புன்னகையையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதும் ஆகும். ஓணம் 2025 நல்வாழ்த்துகள்!
7. இந்த அறுவடை திருவிழா உங்கள் வீட்டை நேர்மறை எண்ணங்களாலும், முடிவில்லா கொண்டாட்டங்களாலும் பிரகாசமாக்கட்டும்.
8. ஓணம் நல்வாழ்த்துகள்! அன்பு, ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் ஒருமைப்பாட்டை கொண்டாடுவோம்.
9. ஓணம் 2025 நல்வாழ்த்துகள்! இந்த அறுவடை திருவிழா மகிழ்ச்சியையும், செழிப்பையும், முடிவில்லா ஆசீர்வாதங்களையும் கொண்டு வரட்டும்.
10. அன்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை நிறைந்த ஒரு வண்ணமயமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஓணம் உங்களுக்கு அமைய வாழ்த்துகள்.
11. ஓணம் நல்வாழ்த்துகள்! உங்கள் இதயம் பூக்கோலம் போல பிரகாசமாகவும், உங்கள் வாழ்க்கை சத்யா போல மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.
12. இந்த ஓணம் திருநாளில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏராளமான செல்வமும், அமைதியும், செழிப்பும் கிடைக்க வாழ்த்துகள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation