கூலி பட நடிகர்களின் சம்பளம்: ரஜினிகாந்த் முதல் ஆமீர் கான் வரை பல கோடிகளில் ஊதியம் பெற்ற ஸ்டார் ஹீரோக்கள்

கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் ரூ. 200 கோடி எனவும், கௌரவ தோற்றத்தில் நடித்ததற்காக ஆமீர் கானுக்கு ரூ. 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.
image

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தில் பணியாற்றிய ரஜினிகாந்த், ஆமீர் கான் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. பான் இந்தியன் திரைப்படமாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் கூலி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நாகார்ஜூனா, ஆமீர் கான், ஷௌபின், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பான் இந்தியன் திரைப்படம்:

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களின் இமாலய வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் இணைந்திருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக, தெலுங்கில் இருந்து நாகார்ஜூனா, மலையாளத்தில் இருந்து ஷௌபின், கன்னடத்தில் இருந்து உபேந்திரா, இந்தியில் இருந்து ஆமீர் கான் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதால், இப்படம் பான் இந்தியன் அந்தஸ்தை அடைந்தது.

Rajini and Lokesh

இந்த சூழலில், கூலி திரைப்படத்தில் நடித்த முக்கியமான நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் சம்பளம் தொடர்பான தகவல் இணையத்தில் உலா வருகிறது. ஒரு படத்தில் நடிப்பதற்கு, பிரபலமான நடிகர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா என்று சாமானிய மக்கள் திகைக்கும் அளவிற்கான தொகை அவர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

வியக்க வைக்கும் சம்பளம்:

அதனடிப்படையில், கூலி திரைப்படத்தின் ஹீரோவான ரஜினிகாந்துக்கு சுமார் ரூ. 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதலில், ரூ. 150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், படம் வெளியாவதற்கு முன்னரே அதிகப்படியான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதால், ரஜினிகாந்துக்கு கூடுதலாக ரூ. 50 கோடி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இது தவிர படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் ஆமீர் கானுக்கும் சுமார் ரூ. 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் உலா வருகிறது. ஏறத்தாழ 15 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வரும் ஆமீர் கானுக்கு இவ்வளவு பெரிய தொகையா என பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Nagarjuna and Lokesh

மற்ற நடிகர்களின் சம்பளம்:

இவர்களை தவிர தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜூனா, கூலி திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு சுமார். ரூ. 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜுக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதேபோல், உபேந்திராவுக்கு ரூ. 4 கோடியும், ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 4 கோடியும், ஷௌபினுக்கு ரூ. 1 கோடியும் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல் வைரல் ஹிட்டான நிலையில், அப்பாடலில் நடனமாடிய பூஜா ஹெக்டேவுக்கு ரூ. 3 கோடி வழங்கப்பட்டதாக தெரிகிறது.

Shruti and Lokesh

லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்தின் சம்பளம்:

நடிகர்கள் மட்டுமின்றி இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கணிசமான அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், லோகேஷ் ரூ. 50 கோடியும், அனிருத் ரூ. 15 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர் என்று சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். ஒரு பான் இந்தியன் திரைப்படத்தில் பணியாற்றும் முன்னணி நடிகர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில், இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Sun Pictures

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP