new serial

கிளைமேக்ஸை நெருங்கும் கண்ணான கண்ணே சீரியல்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு சீரியல் குழு நன்றி தெரிவித்துள்ளது. 
Editorial
Updated:- 2023-03-03, 17:17 IST

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சன் டிவிக்கு தனி அடையாளம் உள்ளது. இதில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சித்தி தொடங்கி தென்றல், கோலங்கள், மெட்டி ஒலி, திருமதி செல்வம் என இன்றும் சன் டிவியில் ஒளிப்பரப்பான பல சீரியல்கள் ரசிகர்கள் மனதில் தனி வரவேற்புடன் உள்ளது. அந்த வகையில், தற்போதும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர் நீச்சல், சுந்தரி, கயல் போன்ற சீரியல் டிஆர்.பி வரிசையில் கலக்கி வருகின்றன.

அந்த வகையில், சன் டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் கண்ணான கண்ணே. பாடகி சித்ராவின் குரலில் ஒளிப்பரப்பாகும் முதல் பாடலே மனதை வருடும். அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்போராட்டம் தான் இந்த சீரியலின் ஒன்லைன். கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த பதிவும் உதவலாம்:பாலிவுட்டின் உச்ச நடிகையை நேரில் சந்தித்த சன் டிவி சீரியல் நடிகை ஸ்ருதிராஜ்

இந்தத் தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி மற்றும் பப்லூ பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது பிரபல தெலுங்கு தொலைக்காட்சி தொடரான பௌர்ணமியின் தமிழ் ரீமேக் என்பது கூடுதல் தகவல். 700 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் இப்போது கிளைமேக்ஸை எட்டியுள்ளது.

kannanakanne serial

கதைப்படி தற்போது மீராவுக்கு வளைக்காப்பு விழா நடந்து கொண்டிருக்கிறது. மீராவின் அப்பா, இத்தனை வருடங்களாக மீராவை வெறுத்து வந்தார். கடைசியில் அவர் மீராவின் உண்மையான அன்பை புரிந்து கொண்டு அவரை ஏற்றுக் கொள்கிறார். வரும் சனிக்கிழமை அன்று இந்த சீரியல் முடிவடைகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்த சீரியக்ல் குழு , இத்தனை வருடங்களாக சீரியலுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி கூறியுள்ளனர். மேலும், அடுத்த வாரம் முதல் இந்த நேரத்தில் ‘மிஸ்டர் மனைவி’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளது. இதில் செம்பருத்தி புகழ் ஷபானா லீட் ரோலில் நடிக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்:போலி நகை மோசடியில் சின்னத்திரை சீரியல் நடிகை கைது

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com