இணையத்தை கலக்கும் எதிர்நீச்சல் ஆதிரை - கரிகாலன் திருமண போஸ்டர்

எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை - கரிகாலன் திருமண போஸ்டர்கள் இணையத்தில் செம்ம வைரலாக ஷேர் ஆகி வருகின்றன.  பொன்னியின் செல்வன், பாகுபலி படங்களை கிராஃபிக்ஸ் செய்து திருமண போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. 

ethir neechal serial karikalan

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கோலங்கள் தொடர் புகழ் திருச்செல்வம் இந்த தொடரை இயக்கி வருகிறார். 5 பெண்களின் வாழ்க்கை கதையே இந்த எதிர் நீச்சல் தொடரின் ஒன்லைன். பெண்கள் மத்தியில் இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதே சமயம் இளைஞர்கள் விரும்பி பார்க்கும் தொடராகவும் இது இருப்பது இன்னும் ஆச்சரியம். இணையத்தில் எதிர் நீச்சல் சீரியல் குறித்த அப்டேட்டுகள், புரமோக்கள் தினமும் வெளியாகி லைக்ஸ்களை அள்ளும். அந்த வகையில் தற்போது சீரியலில் ஆதிரை- கரிகாலன் திருமண எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

ஆதிரைக்கு சற்றும் விரும்பமில்லாத இந்த திருமணம் அவரின் அண்ணன் குணசேகரன் விருப்படி நடக்கிறது. ஆனால் ஜனனி ஆதிரையை அருணுடன் சேர்த்து வைக்க பல ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஜனனிக்கு சக்தி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா அனைவரும் உதவி செய்கிறார்கள். ஆதிரை - அருண் திருமனத்தை பார்க்க ஒட்டு மொத்த ரசிகர்களும் வெயிட்டிங். இந்நிலையில் ஆதிரை - கரிகாலன் திருமன போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி பயங்கர வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

ethir neechal  episode

இந்த சீரியலில் கரிகாலனாக நடிக்கும் விமலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் உள்ளது. இந்நிலையில் கரிகாலன் வந்தியதேவனாகவும் ஆதிரை குந்தவை இளவரசியாகவும் கிராஃபிக்ஸ் செய்து திருமன போஸ்டர் வெளியாகியுள்ளது. அதே போல் கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி ராஜமாத சிவகாமி வேடத்தில் இருக்க, பாகுபலி கெட்டபில் மற்றொரு திருமன போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகின்றன.பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்தி இருக்கும் கரிகாலம் - ஆதிரை திருமண் எபிசோடுக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் வெயிட்டிங்.

sun tv ethir neechal

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: instagram
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP

FAQ

  • எதிர்நீச்சல் சீரியல் குணா யார்?

    எதிர்நீச்சல் சீரியலில் குணசேகராக நடிப்பவர் ஜி மாரிமுத்து ஆவார். இவர் விமல் - பிரச்சனா நடித்த புலிவால் படத்தின் இயக்குனரும் கூட.