தலைமுடியை எளிதாக சுத்தம் செய்ய இது ஒரு வழியாகும். இந்த முறை வண்ணம் தீட்டப்பட்ட கூந்தலுக்கும் கூட நல்லது. இதற்கு, நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி ஷாம்பு மற்றும் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கலக்க வேண்டும். இந்த கலவையை ஒரு அகன்ற பல் கொண்ட சீப்பில் தடவவும். தலைமுடி நன்கு மூடப்பட்டிருக்கும் வகையில் இந்த சீப்பால் தலைமுடியை சீப்புங்கள். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை கழுவ வேண்டும். இதற்குப் பிறகு, ஷாம்பு செய்யவும்.
மேலும் படிக்க: முகத்தை போல உச்சந்தலைக்கு ஸ்க்ரப் செய்வதால் கிடைக்கும் 5 நன்மைகளை பற்றி பார்க்கலாம்
முடியில் படிந்திருக்கும் ஹேர் ஸ்ப்ரே மற்றும் பிற அசுத்தங்களை சிறப்பாக சுத்தம் செய்ய க்ளாரிஃபையிங் ஷாம்புகளையும் பயன்படுத்தலாம். அவை முடி மற்றும் உச்சந்தலையை ஆழமாக சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. 8-10 நாட்களுக்கு ஒரு முறை க்ளாரிஃபையிங் ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைமுடியை நன்கு சுத்தம் செய்யலாம். இருப்பினும், ஷாம்பு செய்த பிறகு முடியில் கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
ஆப்பிள் சைடர் வினிகர் தலைமுடியின் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக்கொள்கிறது. இது தலைமுடியின் pH அளவை பராமரிக்க உதவுகிறது. இது முடியிலிருந்து ஹேர் ஸ்ப்ரே படிந்திருப்பதை நீக்கி மீண்டும் மென்மையாக்க உதவுகிறது. இதற்காக, முதலில் தலைமுடியை ஷாம்பு செய்யவும். இப்போது ஒரு கப் தண்ணீரில் 1/4 கப் ஆப்பிள் சைடர் வினிகரை கலக்கவும். இதன்பிறகு தலைமுடியை இந்த தண்ணீரில் கழுவி இரண்டு-மூன்று நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அதன்பிறகு முடியை நன்கு சுத்தம் செய்யவும்.
மேலும் படிக்க: கெமிக்கல் இல்லாமல் வாழைப்பழம் கொண்டு கூந்தலை சாஃப்டாகவும், பளபளப்பாகவும் மாற்றும் கண்டிஷனர்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com