herzindagi
image

ஆரோக்கியத்தை மேம்படுத்த 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம்

உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால் குறைந்தபட்சம் 7 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 9 மணி நேரம் வரை அவசியம் உறங்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Editorial
Updated:- 2025-08-15, 15:14 IST

இன்றைய சூழலில் ஏராளமானவர்கள் இரவு நேரத்தில் தாமதமாக உறங்கச் செல்வதையோ அல்லது உறக்கத்தை தவிர்ப்பதையோ வழக்கமாக கொண்டுள்ளனர். அதேசமயம், ஆழ்ந்த உறக்கத்தை பெற பலரும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படும் 8 மணி நேர தூக்கத்தை பெற கடும் முயற்சிகளை செய்கின்றனர். இந்த சூழலில் சமீபத்திய ஆய்வு முடிவுகளில் 7 முதல் 9 மணி நேரத்திற்கு மிகாமல் உறங்குவதே ஆரோக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காலையில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு சோம்பேறித்தனம் உருவாக இதுதான் காரணம்

 

7 முதல் 9 மணி நேர உறக்கம்

 

அந்த வகையில், 7 முதல் 9 மணி நேர உறக்கம் என்பது உடலுக்கு ஓய்வு அளிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும், உடல் இயக்கத்தை சீராக்கவும் இன்றி அமையாதது ஆகும். எனினும், 7 அல்லது 9 மணி நேரம் எனக் கூறப்படுவதில் சரியாக எதனை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் சிலருக்கு எழலாம். 7 அல்லது 9 மணி நேர உறக்கம் என்று குறிப்பிட்ட ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இந்த இடைவெளியில் எந்த அளவு உறக்கம் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதை கண்டறிவதே அவசியம் ஆகும்.

Woman sleeping

 

இப்படி செய்வதன் மூலம் நாள் முழுவதும் நாம் புத்துணர்ச்சியாக இயங்க முடியும். தூக்கத்தின் அளவை நிர்ணயிப்பதில் வயது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. சுமார் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும். இளம் பருவத்தினர், தங்கள் உறக்கத்தை 7 முதல் 9 மணி நேரம் வரை பார்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற வகையில் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: பல பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்பட முக்கியமான 3 காரணங்கள்

 

உடல் ஆரோக்கியத்தில் தூக்கத்தின் பங்களிப்பு

 

சிலரால் 7 மணி நேர உறக்கத்துடன் சிறப்பாக இயங்க முடியும். ஆனால், சிலரை பொறுத்தவரை 9 மணி நேரம் தூக்கம் அவர்களுக்கு தேவைப்படும். இது மட்டுமின்றி நல்ல உறக்கத்திற்கு வேறு சில காரணிகளும் தேவைப்படும். மன அழுத்தம் இல்லாமல் இருத்தல், இடையூறு இன்றி உறங்குதல் போன்றவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். இவை உங்கள் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் 7 முதல் 9 மணி நேரம் உறங்கினாலும் பலன் அளிக்காது.

Woman sleeping

 

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த தூக்கம் அவசியம் என்று எல்லோருக்கும் தெரியும். அதனடிப்படையில், 7 முதல் 9 மணி நேரம் தூங்கும் போது மட்டுமே இதனை சீராக வைத்திருக்க முடியும். ஒரு விளையாட்டு வீரர், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் அல்லது மாணவர் என யாராக இருந்தாலும், இந்த அளவிற்கு தூக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், மனதளவிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது உங்களுடைய ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

 

மருத்துவர்களின் ஆலோசனை

 

சில தருணங்களில் 6 முதல் 7 மணி நேரம் தூங்குவது, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், இதனை தொடர்ச்சியான ஒரு பழக்கமாக வைத்துக் கொள்வது, நிச்சயம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது. மறுபுறம், 9 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குவது மன அழுத்தம் அல்லது தைராயிடு போன்ற பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில், சரியான உறக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்பது, அன்றைய தினத்தை திறம்பட நிர்வகிப்பது மட்டுமின்றி ஆரோக்கியம் சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com