
நடிகை காயத்ரி பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார் காயத்ரி. பின்பு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
காய்தரி பிரபல டான்சர் யுவராஜை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.நடிகை காயத்ரி தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் தெரிவித்தார். இவரின் வளைக்காப்பு விழா வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
காயத்ரி தற்போது கர்ப்பகால போட்டோ ஷூட் செய்து அதை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ ஷூட்டை கடற்கரையில் செய்திருக்கிறார். சிவப்பு நிற மாடர்ன் உடையணிந்து ரசிக்க வைத்திருக்கிறார். உடைக்கு ஏற்ற மாதிரி மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்திருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் :ஆன்மீக பயணத்தில் குக் வித் கோமாளி ஸ்ருதிக்கா!

இதற்கு முன்பு தனது கணவர் யுவராஜ் உடன் கருப்பு நிற அவுட் ஃபிட்டில் போட்டோ ஷூட் செய்திருந்தார். இதில் காயத்ரி கருப்பு நிற ஃபிஷ் டைல் உடையை அணிந்திருந்தார். இதற்கு கேப்ஷனாக ‘ நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே..இனி நான் தான் இனிமேலும்..வரம் கேட்க தேவையில்லை..இதுபோல் வேறெங்கும்..சொர்கமில்லை உயிரே வா ’ என்று பதிவிட்டிருந்தார். காயத்ரி பதிவிட்ட கர்ப்பகால போட்டோ ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com