herzindagi
gramathu meen kuzhambu easy

Gramathu Meen Kulambu : தேனா, கிராமத்து மீன் குழம்பா? எது பெஸ்ட்னு நீங்களே சொல்லுங்க!

கிராமத்து மீன் குழம்பின் ருசியை நம் வீட்டு சமையலறையிலும் கொண்டு வர முடியும். இந்த முறையில் செய்து பாருங்க, 100% திருப்திக்கு உறுதி!
Editorial
Updated:- 2023-07-30, 11:27 IST

அம்மியில் அரைத்து, விரகடுப்பை மூட்டி, மண் பானையில் சமைத்தால் அதன் சுவையே தனி. ஆனால் இன்றைய சூழிலில் கிராமங்களில் கூட பலரும் மிக்ஸியை தான் பயன்படுத்துகிறார்கள். தவறல்ல, பெண்களுக்கான சமையலறை நேரத்தை குறைக்க இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளும் தேவை தானே! உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது அம்மியில் அரைத்து குழம்பு செய்து பாருங்கள். ஆனால் இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள மீன் குழம்பு ரெசிபிக்கு அம்மியை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. உங்களிடம் மண்பானை இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் நகரத்தில் இருந்தாலும் சரி,  கிராமங்களில் கிடைக்கக்கூடிய அதே சுவையில் ஒரு கலக்கலான மீன் குழம்பை செய்ய முடியும். இதை செய்து சுவைத்து பாருங்கள் அமிர்தமே தோற்று விடும்! இந்த மீன் குழம்பு செய்வதற்கு மத்தி மீன் அல்லது ஏதேனும் சிறிய மீன்களை பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும். கிராமத்து மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்கும் ஏற்ற ஹெல்தி ஸ்னாக்ஸ்!

 

தேவையான பொருட்கள்

sardines fish curry

  • மீன் - ¼ கிலோ 
  • சின்ன வெங்காயம் - 15
  • தக்காளி 3-4
  • பூண்டு - 15
  • புளி - எலுமிச்சை அளவு 
  • மாங்காய்(விரும்பினால்)
  • கடுகு - 1 டீஸ்பூன் 
  • வெந்தயம் - ¼ டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • பச்சை மிளகாய் 1-2
  • மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன் 
  • குழம்பு மிளகாய் தூள் 2-3 டேபிள் ஸ்பூன் 
  • மிளகு பொடி - ¼ ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • நல்லெண்ணெய் 2-3 டேபிள் ஸ்பூன் 

செய்முறை

village foods

  • முதலில் மீனைக் கழுவி மஞ்சள் பொடி சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
  • கழுவிய மீன்களை தண்ணீர் இல்லாமல் வடித்து தனியாக வைக்கவும்.
  • புளியை தண்ணீரில் ஊற வைக்கவும் மற்றும் தேவையான அளவு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு மிக்ஸர் ஜாரில் நறுக்கிய தக்காளி, 4 சின்ன வெங்காயம் மற்றும் 4 பூண்டு சேர்த்து அரைத்து தயாராக வைக்கவும். இந்த குழம்பு செய்வதற்கு தேங்காய் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • இதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
  • அடுத்ததாக அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது சேர்க்கவும்.
  • புளித்தண்ணீருடன் மஞ்சள் பொடி, குழம்பிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  • வதங்கிய தக்காளி கலவையுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்க்கவும்.
  • இந்த சமயத்தில் காரம் மற்றும் உப்பை சரி பார்த்துக் கொள்ளுங்கள். 
  • குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் குழம்பு கொதிக்கும் பொழுது நறுக்கிய மாங்காய் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பச்சை வாசனை நீங்கி குழம்பு நன்கு கொதித்த பிறகு கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மீன்களை சேர்க்கவும். மீன் சேர்த்த பிறகு கரண்டி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • தேவைப்பட்டால் கடாயை லேசாக சுழற்றிவிடலாம். மீன் சேர்த்த பின் 5 நிமிடங்கள் கொதித்தால் போதுமானது.
  • கடைசியாக மிளகு பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சூடான சாதம் அல்லது இட்லி தோசையுடன் இந்த மீன் குழம்பை சேர்த்து சாப்பிட்டு பாருங்க, தேனா அல்லது இந்த மீன் குழம்பா? எது சுவையானது என்று உங்களுக்கே தெரிந்துவிடும்!

 

இந்த பதிவும் உதவலாம்:  இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com