Hibiscus Dosa : மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி தோசை, காலை உணவுக்கு இப்படி ஹெல்தியா செஞ்சு சாப்பிடுங்க!

காலை உணவுக்கு கொஞ்சம் வித்தியாசமா, நிறைய ஹெல்தியா ஒரு தோசை செய்ய கற்றுக்கொள்வோமா? செஞ்சு சாப்பிடுங்க வயிறு குளிரும், மனசும் நிறையும்…

healthy hibiscus dosa traditional

காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும் காலை வேலைக்கு இடையே ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது. முந்தைய நாள் இரவே காலை வேலைக்கு தேவையான சில முன்னேற்பாடுகளை செய்து விட்டால் போதும், காலையில் எந்த பரபரப்பும் இன்றி பொறுமையாக சமைக்கலாம், ஆரோக்கியமாக வாழலாம்.

அந்த வகையில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு காலை உணவை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இந்த தோசை உடல் சூட்டை குறைந்து, வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். இதனுடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். செம்பருத்தி தோசை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது காணலாம்

தேவையான பொருட்கள்

hibiscus recipes

  • செம்பருத்தி இலை 5-6
  • அரிசி - 1 கப்
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

hibiscus dosa recipe

  • இந்த தோசை செய்வதற்கு பாலிஷ் செய்யப்படாத அரிசியை பயன்படுத்துவது நல்லது. நீங்கள் விரும்பினால் பிரவுன் ரைஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த பாரம்பரிய அரிசியையும் பயன்படுத்தலாம்.
  • முதலில் அரிசி மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவிய பின், தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
  • 3-4 நேரம் கழித்து சுத்தம் செய்து வைத்துள்ள செம்பருத்தி இலைகளுடன் ஊற வைத்த அரிசி வெந்தைய கலவையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • இந்த மாவை குறைந்தது 6-8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்க வேண்டும்.
  • மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, இருபுறமும் நன்கு வெந்த பிறகு சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா செய்ய, இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source: shutterstock

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP