herzindagi
tricolour cake in tamil recipe

How to Make Tricolour Cake in Tamil: மூவர்ண கேக் செய்வது எப்படி ?

மூவர்ண கேக்கை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளுங்கள். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-01-26, 10:16 IST

ஜனவரி 26, நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் தேசபக்தி உணர்வுடனும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டது இந்நாளில் தான் என்பதும் அனைவரும் அறிந்ததே.

tricolour cake in tamil

டிவியில் அணிவகுப்பை பார்த்து மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற அவசியமில்லை. விழாவைக் கொண்டாட பல வழிகள் உள்ளன. தேசிய கொடியின் நிறங்களில் உணவுகளை உருவாக்கி மூவர்ண ரெசிபிகளை தயார் செய்து உங்கள் குடும்பத்தினருடனும், நெருங்கியவர்களுடனும் குடியரசு தினத்தை கொண்டாடலாம். அந்த வகையில் இன்று மூவர்ண கேக் செய்வது எப்படி என்று பாப்போம்.

இதுவும் உதவலாம்:இந்த குடியரசு தினத்திற்கு மூவர்ண இட்லி செய்து அசத்துங்கள்

மூவர்ண கேக் தயார் செய்து எப்படி ?

தேவையான பொருட்கள்

  • மைதா - 1 1/4 கப்
  • பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
  • தயிர் - 1/2 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் - 2 ஸ்பூன
  • எண்ணெய் - 1/4 கப்
  • பேக்கிங் பவுடர் - 1/4 ஸ்பூன்
  • உப்பு - 1/2 ஸ்பூன்
  • பொடித்த சர்க்கரை - 3/4 கப்
  • பால் - 1/4 கப்
  • தேவையான அளவு - ஃபுட் கலர்( பச்சை மற்றும் குங்குமப்பூ கலர்)

tricolour cake in tamil

கேக் மாவை தயார் செய்யவும்

  • மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு முன்கூட்டியே சூடாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை எடுத்து, பேக்கிங் பவுடர், மைதா மாவு, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை நன்கு மிக்ஸ் செய்து வைக்கவும்.
  • பின்பு மற்றொரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் தயிர், சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இப்போது, உலர்ந்த கலவைகளான(பேக்கிங் பவுடர், மைதா மாவு, பேக்கிங் சோடா மற்றும் உப்பு )ஆகியவற்றை தயிர், சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் கலவையுடன் பால் சேர்த்து, அனைத்து பொருட்களையும் நன்கு கேக் மாவு பதம் வர வரை கலந்து வைத்துக் கொள்ளவும்.

இதுவும் உதவலாம்:குடியரசு தின ரெசிபி மூன்று வண்ணத்தில் அசத்தலான சட்னி

மாவை பிரித்து நிறத்தை சேர்க்கவும்

  • தயாரான மாவை மூன்றாக பிரித்துக் கொள்ளவும்
  • மூன்று கிண்ணங்களில் தயார் செய்த மாவை சமமாக நிரப்பி கொள்ளவும்
  • குங்குமப்பூ ஃபுட் கலரை ஒரு கிண்ணம் மாவிலும், இரண்டாவது கிண்ணத்தில் பச்சை நிற ஃபுட் கலரையும், மூன்றாவது கிண்ணம் மாவை அப்படியே வெள்ளையாக வைத்திருக்கவும்.
  • மாவு முழுவதும் வண்ணங்கள் சரியாகவும் சமமாகவும் கலந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்
  • இப்போது, கேக் மோல்டில் சிறிது எண்ணெய் தடவி முதலில் பச்சை நிற மாவை ஊற்றவும், அதன் பிறகு அதன் மேல் வெள்ளை நிற மாவை ஊற்றவும். பின்பு குங்குமப்பூ நிற மாவை ஊற்றவும். மாவை சமன் செய்து, மோல்டை சூடான மைக்ரோவேவ் ஓவனிற்க்கு மாற்றவும்.
  • 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து கேக் வெந்த பிறகு இறக்கி விடவும்.
  • கேக்கை அலங்கரிக்க நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்க்கவும்.

tricolour cake in tamil

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com