நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கி விட்டன. 74வது குடியரசு தின விழா நாளை மறுதினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்திய நாடு குடியரசு அடைந்த இந்த நாளை ஒவ்வொரு இந்தியனும் முறையாக கொண்டாட கடமைப்பட்டிருக்கிறோம். தங்களுக்கு பிடித்தமான வெவ்வேறு வழிகளில் இந்நாளை கொண்டாடி தீர்க்கலாம்.
குறிப்பாக பெண்கள் வீடுகளில் பரிமாறப்படும் உணவுகளில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி தேச பக்தியை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் தேசிய கொடி வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் செய்யப்படும் மூவர்ண கேக், மூன்று வண்ண பொரியல், மூன்று வண்ண இட்லி ரெசிபிக்கள் ஆகியவை பலரது வீடுகளிலும் கட்டாயம் பரிமாறப்படும் உணவாக உள்ளது. இந்த வரிசையில் காலை உணவில் பரிமாறப்படும் சட்னி வகையிலும் உங்களது தேச பக்தியை வெளிப்படுத்தலாம். எப்படி தெரியுமா? வழக்கமாக வீடுகளில் காலை உணவுக்கு ஒன்று அல்லது இரண்டு வகையான சட்னி அரைப்பது தான் வழக்கம்.
ஆனால், குடியரசு தினத்தன்று கொஞ்சம் ஸ்பெஷலாக தேசிய கொடியில் இருக்கும் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை என மூன்று வண்ணங்களில் சட்னி செய்து அசத்திடுங்கள். குழந்தைகள் கலர்ஃபுல்லான சட்னியை பார்த்ததும் நிச்சயம் மகிழ்ச்சி கொள்வார்கள்.
வெள்ளை சட்னி
தேவையான பொருட்கள்
- தேங்காய் – ½ கப்
- பொட்டு கடலை – ½ கப்
- பச்சை மிளகாய் – 3
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் தேங்காய் துண்டுகளுடன் பொட்டு கடலை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
- இதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்து எடுத்து கொள்ளவும்.
- இறுதியாக வழக்கம் போல் கடுகு- கறிவேப்பிலை தாளிப்பு சேர்த்து பரிமாறினால் வெள்ளை சட்னி தயார்.
பச்சை சட்னி
- கொத்தமல்லி – 1 கப்
- தேங்காய் – ½ கப்
- பொட்டு கடலை – ½ கப்
- பச்சை மிளகாய் – 3
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள், பொட்டு கடலை சேர்த்து மைய அரைத்து எடுத்து கொள்ளவும்.
- பின்பு இதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
- இறுதியாக வழக்கம் போல் கடுகு – கறிவேப்பிலை தாளிப்பு சேர்த்து பரிமாறினால் பச்சை சட்னி தயார்.
ஆரஞ்சு சட்னி
தேவையான பொருட்கள்
- தக்காளி – 2
- வெங்காயம் – 2
- காய்ந்த மிளகாய் – 2
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து எடுத்து கொள்ளவும்.
- பின்பு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்பு அதில் அரைத்து வைத்துள்ள சட்னி கலவையை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். காரசாரமான ஆரஞ்சு சட்னி தயார்.
நீங்களும் இந்த குடியரசு தினத்தன்று காலை உணவுக்கு இந்த மூன்று வண்ண சட்னியை செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com