
கூந்தல் பராமரிப்பு என்பது தற்போது பலருக்கு அத்தியாவசியமானதாக மாறி விட்டது. சரியான பராமரிப்பு முறை இருந்தால் மட்டுமே கூந்தல் உதிர்வு மற்றும் வறட்சி தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க: பயோட்டின் குறைபாடா? கவலையே வேண்டாம், உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும் சத்தான உணவுகள்
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் பலருக்கு கூந்தல் வறட்சியாக காணப்படுகிறது. இந்த பிரச்சனைகளை சரிசெய்ய எண்ணற்ற அழகுசாதன பொருட்கள் இருந்தாலும், இயற்கை பொருட்களை பயன்படுத்துவது பலரது விருப்பமாக இருக்கிறது. வீட்டில் எளிதாக கிடைக்கும் முட்டையை கொண்டு, எப்படி சில ஹேர் மாஸ்க்குகளை தயாரிக்கலாம் என்று இந்த கட்டுரையில் காணலாம்.
மூன்று முட்டைகளின் மஞ்சள் கருவை பிரித்து, அதை நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தலைமுடியில் நன்றாக பூசி, அரை மணி நேரம் கழித்து குளித்து விடலாம். இது முடியை மென்மையாக்கி, ஊட்டமளிக்கும்.

இரண்டு அல்லது மூன்று முட்டையின் மஞ்சள் கருவுடன், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தலைமுடியில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து, பின் ஷாம்பு கொண்டு குளிக்கவும். இது வறண்ட கூந்தலுக்கு பளபளப்பை கொடுத்து பொலிவை மீட்டெடுக்க உதவும்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கொத்தமல்லி; இப்படி ட்ரை பண்ணுங்க
அடிக்கடி அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன் வேப்ப எண்ணெய்யை கலந்து பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கை மருந்தாக செயல்பட்டு, இந்த பிரச்சனைகளை சரிசெய்யும்.
பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தலைமுடியில் தடவி ஐந்து மணி நேரம் ஷவர் கேப் அணிந்து, பின்னர் குளிக்கவும். இது பேன்களை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், முடியின் வேர்க்கால்களுக்கும் ஊட்டமளிக்கும்.
-1757685284593.jpg)
இந்த ஹேர் மாஸ்க் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து விடுதலையளிக்கும். எனினும், மழைக்காலங்களில் இந்த மாஸ்க்கை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
இந்த ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கூந்தலை இயற்கையான முறையில் பாதுகாத்து, ஆரோக்கியமான மற்றும் பொலிவான முடியை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com