How to Make Tricolour Idli in Tamil: இந்த குடியரசு தினத்திற்கு மூவர்ண இட்லி செய்து அசத்துங்கள்

வீட்டில் இருக்கும் எளிதான பொருட்களை வைத்தே மூவர்ண இட்லியை சுலபமாக செய்திடலாம். எப்படி செய்வது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

tri colour idli in tamil
tri colour idli in tamil

முழு நாடும் 74வது குடியரசு தினம் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. தெருக்கள், வணிக வளாகங்கள், பள்ளிகூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூவர்ண கலவையில் கொடிகள், பலூன்கள் மற்றும் பல விதங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.

colour idli in tamil

நாட்டின் பல கொண்டாட்டங்களைப் போலவே, குடியரசு தினமும் அதிக உற்சாகத்துடனும், நல்ல உணவுடனும் கொண்டாடப்படுகிறது. பலர் உணவு மூலமும் தங்கள் நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்த செய்கிறார்கள். குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நம் வீட்டிலும் மூவர்ண காலை விருந்தை இட்லி மாவு வைத்தே உருவாக்குவது எப்படி என்று பார்போம். அதற்கு முன்பு மூவர்ணக் கொடியின் விளக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்.

மூவர்ணக் கொடியின் விளக்கம்

  • மூவர்ண கொடியில் முதலில் உள்ள காவி நிறம் வலிமையையும், தைரியத்தையும் குறிக்கிறது.
  • வெண்மை நிறம் அமைதியையும், உண்மையையும் குறிக்கிறது.
  • பச்சை நிறம் வளர்ச்சி, விவசாய செழிப்பு ,பசுமை வளத்தை குறிக்கிறது.
  • மூவர்ணக் கொடியில் உள்ள அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கிறது.

மூவர்ண இட்லி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு - 3 கப்
  • கேரட் - 1 கப் (துருவியது)
  • பாலக் கீரை கூழ் - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
colour idli in tamil

செய்முறை

  • முதலில் மூன்று கப் மாவிற்கு மூன்று வெவ்வேறு பாத்திரங்கள் எடுத்து கொள்ளுங்கள்.
  • ஆரஞ்சு நிறத்திற்கு - துருவிய கேரட்டை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நன்கு கூழாக அரைத்து கொள்ளவும். இந்த கேரட் கூழை 1 கப் இட்லி மாவுடன் கலந்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்து கொள்ளவும்.
  • பச்சை நிறத்திற்கு - மற்றொரு பாத்திரத்தில் அரைத்து வைத்த பாலக் கீரையை 1 கப் இட்லி மாவுடன் கலந்து வைத்து கொள்ளவும்.
  • வெள்ளை நிறத்திற்கு - மூன்றாவது பாத்திரத்தில் 1 கப் இட்லி மாவை மட்டும் நிரப்பி கொள்ளவும்.
  • இப்போது இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, ஒரு இட்லி குழியில் 3 நிற மாவுகளையும் ஊற்ற வேண்டும். அதாவது ஒரு இட்லி குழியில் இடது பக்கம் 1 ஸ்பூன் ஆரஞ்சு நிற மாவும் ,நடுவில் ஒரு ஸ்பூன் வெள்ளை மாவும், வலது பக்கத்தில் 1 ஸ்பூன் பச்சை நிற மாவும் ஊற்ற வேண்டும்.
  • இதே போன்று இட்லி தட்டிலுள்ள அனைத்து இட்லி குழிகளிலும் ஊற்றி கொள்ளுங்கள்.
  • சுமார் 7-10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் கண்களை கவரும் வண்ணங்களில் மூவர்ண இட்லி தயார். இதனுடன் மூவர்ண சட்னி(தக்காளி, தேங்காய், மல்லி) சேர்த்து சாபிட்டால் பிரமாதமாக இருக்கும்.
colour idli in tamil

இதுவும் உதவலாம்:காரசாரமான மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP