
வீட்டிலேயே எளிதாக வளர்க்கக் கூடிய செடி வகைகளில் கற்றாழை முக்கியமானது. சிறிய இடங்களில் கூட கற்றாழையை மிக எளிதாக நம்மால் வளர்க்க முடியும். போதுமான சூரிய ஒளி, எளிதில் நீரை வெளியேற்றும் மண் மற்றும் அளவான நீர் பாசனம் ஆகியவை இருந்தால் கற்றாழை சிறப்பாக வளரும். அதன்படி, நம்முடைய வீட்டில் எளிதாக கற்றாழையை எப்படி பராமரித்து வளர்க்கலாம் என்று இதில் காண்போம்.
மேலும் படிக்க: வீட்டிலேயே கொய்யா வளர்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
கற்றாழையின் வேர்கள் ஆழமாக செல்லாமல், பரவலாக இருக்கும். எனவே, ஆழம் குறைவாகவும், அகலமாகவும் உள்ள ஒரு நல்ல வடிகால் துளைகள் கொண்ட தொட்டியை தேர்வு செய்யுங்கள். இதற்கு களிமண் தொட்டிகள் சிறந்தவை. உங்கள் பால்கனியில் பிரகாசமான ஒளி கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைக்கவும். ஆனால், மதிய நேரத்தின் கடுமையான சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கற்றாழைக்கு, நீரை வேகமாக வெளியேற்றும் மண் சரியாக இருக்கும். வேர்களை சுற்றியுள்ள நீர் தேக்கம், செடி அழுகி போவதற்கு முக்கிய காரணமாகும். எனவே, மணல் கலவையை சரியாக உருவாக்க வேண்டும். இது மண்ணின் காற்றோட்டத்தை மேம்படுத்தி, நீர் தேங்குவதை தடுத்து, வேர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

கற்றாழைக்கு பிரகாசமான சூரிய ஒளி தேவை. ஆனால், கடுமையான வெயில் அதன் இலைகளை பாதிக்கக் கூடும். எனவே, காலை நேரத்து சூரிய ஒளி மற்றும் மதிய நேரத்தில் நிழல் கிடைக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள். செடியை வீட்டிற்கு வெளியே வைத்தால், அதிக வெளிச்சத்தை பழக்கப்படுத்த மெதுவாக அதை வெளிப்படுத்தவும்.
மேலும் படிக்க: சுவை மற்றும் சத்து மிகுந்த சுரைக்காய்; உங்கள் வீட்டு தோட்டத்திலேயே சுலபமாக வளர்க்கலாம்
கற்றாழை ஒரு சதைப்பற்றுள்ள செடி என்பதால், அதன் இலைகளில் தண்ணீரை சேமித்து வைக்கும். அதனால், அதற்கு தொடர்ந்து ஈரமான மண் தேவையில்லை. மேல் அடுக்கு மண் முழுவதுமாக காய்ந்த பின் மட்டுமே, நன்கு ஆழமாக நீர் ஊற்றவும். குளிர் காலங்களில், நீர் ஊற்றுவதை குறைத்துக் கொள்ளவும். தொட்டியின் அடியில் நீண்ட நேரம் தண்ணீர் தேங்கி இருக்க கூடாது. அளவுக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவது செடி அழுகுவதற்கு பொதுவான காரணமாகும்.

காலப்போக்கில், உங்கள் கற்றாழை செடி தொட்டியை விட பெரிதாக வளரும் அல்லது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகள் குறையக்கூடும். அதனால், 2 முதல் 3 வருடங்களுக்கு ஒருமுறை, அதை சற்று பெரிய தொட்டிக்கு, புதிய மண் கொண்டு மாற்றி நடவு செய்யுங்கள். இந்த எளிய பராமரிப்பு முறைகளை பின்பற்றினால், உங்கள் வீட்டு தோட்டத்தில் ஆரோக்கியமான கற்றாழை செடியை வளர்ப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com