Traditional Recipes for Pongal: தைத் திருநாள் பண்டிகைக்கான பாரம்பரிய சமையல்!

இயற்கைக்கும், நண்பனாக தம்முடன் சேர்ந்து பயணிக்கும் கால்நடைக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

Pongal recipes

உலகம் முழுவதும் பராம்பரியம் மாறாமல் இன்னும் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தைத் திருநாள்.உழவுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கும், நண்பனாக தம்முடன் சேர்ந்து பயணிக்கும் கால்நடைக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை 1 ஆம் தேதி முதல் தை 3 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

புத்தாடைகள் அணிந்து தை முதல் சூரியனுக்கும், இரண்டாம் நாள் காளைகள் மற்றும் பசு மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். முன்பெல்லாம் தங்களது நிலத்தில் விளைவித்த காய் கறிகள் மற்றும் சிறு தானியங்களைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் தான் பொங்கல் பண்டிகைகளில் பிரதானமாக இருக்கும். இதே போன்று வருகின்ற பொங்கல் திருநாளில் நீங்களும் பராம்பரிய ரெசிபிகள் செய்ய வேண்டுமா? இதோ உங்களுக்கான சில ரெசிபி டிப்ஸ் இங்கே!

south indian festival

தைத் திருநாளில் பாரம்பரிய ரெசிபிகள்:

மேலும் படிங்க: தைப் பொங்கலும் அதன் சுவாரஸ்சிய வரலாறும்!

வரகரசி பொங்கல்

தேவையான பொருட்கள்:

  • வரகரசி - 2 கப்
  • பாசிப்பருப்பு - 1 கப்
  • வெல்லம் - 200 கிராம்
  • பால் - 2 கப்
  • தேங்காய் துருவல் - சிறிதளவு
  • நெய் - தேவையான அளவு
  • முந்திரி,திராட்சை, ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை:

  • முதலில் அடி கனமான பாத்திரத்தில் பாசிப்பருப்பு மற்றும் வரகரசி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக குழையும் வரை வேக வைக்கவும். 5 நிமிடத்திற்குப் பிறகு இதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இதையடுத்து வெல்லத்தை போட்டு கிளறவும். உங்களுக்குத் தேவையென்றால் வெல்லத்தைப் பாகு போன்று காய்ச்சியும் பொங்கலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
varagarsi pongal
  • இறுதியில் கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை, போன்றவற்றை லேசாக வறுத்து பொங்கலில் சேர்த்துக் கொண்டால் போதும் ருசியான வரகரசி பொங்கல் ரெடி.
  • வரகரசி பொங்கல் மட்டுமில்லாது உழவர்கள் தங்களது நிலத்தில் விளைந்த சாமை, தினை போன்ற சிறு தானியங்களைக் கொண்டும் விதவிதமான பொங்கல் சமைத்து மகிழ்வார்கள்.

தினை பாயாசம்:

தேவையான பொருட்கள்

  • தினை மாவு - 100 கிராம்
  • சர்க்கரை - 200 கிராம்
  • முந்திரி,திராட்சை - தேவையான அளவு
  • பால் - 500 மில்லி கிராம்
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • ஏலக்காய், சுக்கு - சிறிதளவு

செய்முறை:

thinai payasam

  • முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தினை மாவுடன் தண்ணீர் கலந்துக்கொள்ளவும்.
  • பின்னர் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறவும். சிறிது நேரத்திற்குப் பிறகு இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.
  • இதையடுத்து நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சை, பொடி செய்த ஏலக்காய் மற்றும் காய்ச்சி வைத்த பால் அகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்தால் போதும் சுவையான தினை பாயாசம் ரெடி.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP