herzindagi
pongal outfit

Traditional Pongal Sarees 2024: விதவிதமான காட்டன் புடவைகளோடு களைக்கட்டும் பொங்கல் திருநாள்!..

<span style="text-align: justify;">&nbsp;என்ன தான் சுடிதார், குர்த்தி மற்றும் மேற்கத்திய ஆடைகளை உடுத்தினாலும் பொங்கல் வைக்கும் போது சேலைகள் கட்டுவது பெண்களுக்கு தனி அழகு தான்.</span>
Editorial
Updated:- 2024-01-05, 18:45 IST

தமிழர்களின் பராம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்று தான் தைத் திருநாள். உழவர்களுக்கும், உழவுக்கு உதவியாக இருக்கும் காளைகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக கொண்டாடக்கூடிய தைப் பொங்கல் தினத்தில் பெண்கள் சேலைகளைத் தான் விரும்பி வாங்குகிறார்கள்.  என்ன தான் சுடிதார், குர்த்தி மற்றும் மேற்கத்திய ஆடைகளை உடுத்தினாலும் பொங்கல் வைக்கும் போது சேலைகள் கட்டுவது பெண்களுக்கு தனி அழகு தான். இதோ இந்தாண்டு பொங்கலுக்காகவே டிரெண்டியாக உள்ள சேலைகளின் லிஸ்டுகளை நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள்..

Pongal trendy sarees 

மேலும் படிங்க: தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளைக் கொண்டாட சிறந்த இடங்கள் இது தான்!

பொங்கலும் விதவிதமான சேலைகளும்…

பொங்கல் என்றாலே பராம்பரியம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்றைக்கு உள்ள பெண்கள் பழமையான விஷயங்களை சீக்கிரம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதுப்போன்றவர்களுக்காகவே பல டிரெண்டியான சேலைகள் சந்தைகளில் விற்பனையாகிறது.    

  • காட்டன் ஆடைகளுக்குப் பெயர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் ஆண்டுதோறும் புடவைகளின் விற்பனை களைக்கட்டும். அதிலும் பொங்கல் திருநாள் என்றால் சொல்லவே தேவையில்லை. வயதானவர்கள் கட்டும் 16 கஜம் புடவைகள்  முதல் இளைய தலைமுறையினர் வரை அணியக்கூடிய வகையிலான சேலைகள் விற்பனைக்கு இருக்கும். சுங்குடி காட்டன், சில்க் காட்டன்,  பனாரஸ் காட்டன் என பல வகைகளில் விற்பனையாகிறது. இந்த பொங்கலுக்கும் பெண்கள் ஆர்வத்துடன் அதிக புடவைகளை நேரிலும் , ஆன்லைன் வாயிலாகவும் வாங்கி மகிழ்கின்றனர்.
  • அடுத்ததாக பெண்களுக்கு விருப்பமான புடவைகள் என்றால் பட்டு தான். அனைவராலும் அதிக விலைக்கொடுத்து வாங்க முடியாது. இவர்களுக்காகவே சில்க் காட்டன் மற்றும் சாஃப்ட் சில்க் சேலைகள் சந்தைகளில் விற்பனையாகிறது. குறிப்பாக இளம்பிள்ளை புடவைகள், குபேரர் பட்டு புடவைகள், கோவை சிறுமுகை சேலைகளும் பெண்களிடம் பிரபலமாகியுள்ளது.

elampillai saree

  • இது மட்டுமின்றி ஜூட் சில்க், லினன் சில்க் போன்ற சேலைகளிலும் இந்த பொங்கலுக்காக பெண்களிடம் டிரெண்டிங்கில் உள்ளது. இவ்வாறு புடவைகள் அணிந்து பொங்கல் திருவிழாவை நீங்கள் கொண்டாடும் போது வரும் தலைமுறையினரும் பாரம்பரியத்தோடு பயணிக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
  • பொங்கல் திருநாளுக்கு புடவைகள் மட்டுமில்லாது இளம் பெண்கள் அணியக்கூடிய தாவணிகளும் டிரெண்டிங்கில் தான் உள்ளது. கிராமம் மற்றும் நகரங்களில் பண்டிகைக்காலங்கள் என்றால் தாவணி அணியக்கூடிய பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்களும் இந்த பொங்கல் பண்டிகையின் போது தாவணிகள் அணிய வேண்டும் என்றால் பாவாடை, சட்டை, தாவணி போன்றவற்றை தனித்தனி கலர்களில் அணியலாம். இது உங்களை டிரெண்டிக்காக காட்டும்.  மேலும் லெஹன்கா ஆடைகளும் பெண்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.

children silk

  • பொங்கல் திருநாளில் இளம் பெண்களுக்கு மட்டுமில்லாது, பெண் குழந்தைகளும் பராம்பரிய ஆடைகள் அணிவது சமீப காலங்களாக டிரெண்டிங்கில் உள்ளது. இந்த பொங்கலுக்கு பஃப் வைத்து தைத்த சட்டைகளோடு பட்டு பாவடைகள் அணியும் போது நம்முடைய குழந்தைகளும் பாரம்பரியத்தில் ஜொலிப்பார்கள். 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com