herzindagi
image

மூளைக்கு வேலை கொடுங்க; ஞாபக சக்தி மற்றும் கவனத்தை அதிகரிக்கும் 5 சூப்பர் வழிகள்!

நமது மூளையை ஆரோக்கியமாக பராமரிக்கும் விதமாக சில பயிற்சிகளை செய்ய முடியும். இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு நம்முடைய மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்க நம்மால் முடியும்.
Editorial
Updated:- 2025-10-31, 14:12 IST

உடற்பயிற்சி குறித்து பேசும் போது, பொதுவாக உறுதியான கைகள், வலுவான கால்கள் மற்றும் ஆரோக்கியமான இதயம் போன்ற உடல் உறுப்புகளை பற்றியே நினைப்பார்கள். ஆனால், மூளைக்கும் வழக்கமான பயிற்சி தேவை. செயலற்று இருக்கும்போது மூளையின் வேகம் குறையும். அதை சரியான முறையில் பயன்படுத்தும் போது, எவ்வளவு கூர்மையாகவும், உறுதியாகவும் மாறுகிறது என்பதை நம்மால் உணர முடியும். அந்த வகையில் மூளைக்கு எவ்வாறு பயிற்சி கொடுப்பது என இதில் காண்போம்.

மேலும் படிக்க: ஊறவைத்த பூசணி விதைகளில் இவ்வளவு நன்மைகளா? நோட் பண்ணுங்க மக்களே

 

தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி:

 

பலர் "தியானம்" என்ற வார்த்தையை கேட்டாலே, கால்களை மடக்கி அமர்ந்து மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பதை நினைப்பார்கள். ஆனால் உண்மையில், இது ஒரு நாளைக்கு பத்து நிமிடங்கள் கூட இருக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மூச்சை கவனிப்பது மட்டுமே. இந்த எளிய செயல் கவனத்தை வலுப்படுத்துகிறது. காலப்போக்கில், தியானம் மூளையின் நினைவாற்றலுடன் தொடர்புடைய பகுதியான ஹிப்போகாம்பஸ்ஸின் (Hippocampus) அமைப்பை மாற்றியமைப்பதாக கூறப்படுகிறது.

Brain

 

புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது:

 

மூளையை விழித்திருக்க செய்ய, அதற்கு பழக்கமில்லாத ஒன்றை செய்ய சொல்வதே விரைவான வழி. வயலின் வாசிக்க கற்றுக்கொள்வது, ஜப்பானிய மொழி கற்பது அல்லது சமைப்பது என புதிய விஷயங்களை செய்யலாம். இது ஆரம்பத்தில் உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், இவ்வாறு புதிய விஷயங்களை செய்யும் போது மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

 

புதிர்கள் மற்றும் விளையாட்டுகள்:

 

புதிர்கள் மூளையை சிந்திக்க வைக்கின்றன. குறிப்பாக, வார்த்தை விளையாட்டுகள் நினைவாற்றலை தூண்டுகின்றன. வெவ்வேறு புதிர்களுக்கு இடையில் மாறுவது, உங்கள் மூளை ஒரே மாதிரியான செயல்பாட்டில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இதனை உங்கள் மனதின் தசைகளுக்கு வெவ்வேறு சவால்களை கொடுப்பது போல எண்ணிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்

 

மூளையை ஈடுபடுத்தும் உடல் அசைவுகள்:

 

உடற்பயிற்சி என்பது தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்ல; அது மூளைக்கும் ஊட்டமளிக்கிறது. ஒரு விரைவான நடைபயிற்சி, இரத்த ஓட்டத்தின் மூலம் மூளைக்கு ஆக்ஸிஜனை அனுப்புகிறது. நடனம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நீங்கள் தாளத்திற்கு ஏற்ப அசைவுகளை நினைவில் வைத்து கொள்கிறீர்கள். தற்காப்புக் கலைகள், யோகா அல்லது நடனப் பயிற்சிகள் அனைத்தும் மூளையை பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய தூண்டுகின்றன.

 

படித்தல் மற்றும் எழுதுதல்:

 

வேகமாக நகரும் இந்த உலகில், ஒரு புத்தகத்துடன் அமர்ந்து படிக்கும் செயல் புரட்சிகரமானது போல் தோன்றலாம். ஒரு கதையில் முழு கவனம் செலுத்துவது, கவனத்தை மேம்படுத்துகிறது மற்றும் கற்பனையைத் தூண்டுகிறது. கதை எழுதுவது இன்னும் அதிக பலன்களை தருகிறது. டைரி எழுதுதல், கட்டுரை எழுதுதல், அல்லது சத்தமாக கதை சொல்லுதல் போன்றவை எண்ணங்களை ஒழுங்கமைக்கவும், விவரங்களை நினைவுகூரவும் உதவுகின்றன.

Reading

 

இந்த பயிற்சிகள் அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினால் நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com