
தமிழ் மாதங்களிலேயே இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக உள்ளது கார்த்திகை. இந்த மாதத்தின் முதல் நாளில் இருந்தே இஷ்ட தெய்வங்களை வேண்டிய ஐயப்பன் மற்றும் முருகனுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். மாலை அணிந்த நாளிலிருந்து வீட்டில் தினமும் பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். இவ்வாறு செய்யும் போது வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் விலகி எப்போதும் நேர்மறை ஆற்றல் கிடைக்கப்பெறும் என்ற ஐதீகம் உள்ளது. இதோடு மட்டுமின்றி கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பெரிய கார்த்திகை நாளில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் விளக்கேற்றி வழிபடும் போது அனைத்து நன்மைகளையும் எவ்வித தடங்கள் இன்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இந்த கார்த்திகை மாதத்தில் இறைவன் அருள் பெற எப்படி விளக்கேற்ற வேண்டும்? என்பது குறித்த தகவல்களை இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினம் அதாவது பெரிய கார்த்திகை நாளில் மட்டுமே தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வீட்டில் விளக்கேற்றி வழிபடுவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் தொடங்கிய நாளிலிருந்து விளக்கேற்றும் போது அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை மாதத்தில் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். காலையில் வீட்டில் விளக்கேற்றுவதாக இருந்தால் சூரிய உதயத்திற்கு முன்னதாகவும், மாலையில் 6 மணிக்கு முன்னதாக வீட்டில் வாசலில் விளக்கேற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
விளக்குகளை அப்படியே தரையில் வைக்கக்கூடாது. சிறிய வாழை இலை, அரச இலை, ஆலமர இலை போன்றவற்றை சிறிய தட்டின் மேல் வைத்து விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும் முன்னதாக வீட்டில் உள்ள பூஜை அறையின் சாமி படங்களை நன்கு துடைத்துவிடவும். பின்னர் மலர்களால் அலங்காரம் செய்த பின்னதாக பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.
மேலும் படிக்க: பிரம்மாண்ட திருவண்ணாமலை மகாதீபத்திருவிழா பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்வோம்
வீட்டு முற்றத்தில் 4 விளக்குகளும், சமையல் அறையில் 1, நடையில் 2, வீட்டின் பின்புறம் 4, திண்ணையில் 4, மாட குழியில் 2, சாமி படத்திற்கு 2, வாசலில் கோலம் போட்ட இடத்தில் 5 உட்பட 27 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். உங்களால் 27 விளக்குகளைப் போடமுடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும். 27 விளக்குகளைத் தவிர வீட்டை அலங்கரிப்பதற்காக பல விளக்குகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏற்றிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் திருச்செந்தூர் முருகனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?
27 விளக்குகள் முதல் 108 வரை விளக்குகள் ஏற்றவும். வாசல் கோல நடுவில் மற்றும் நிலைவாசலில் முதலில் ஏற்றி, வெளி தீபத்தை உள்ளே கொண்டு வந்து பூஜையறையில் ஏற்ற வேண்டும். பின் சமையலறை, ஹால், படுக்கையறை எங்கும் ஏற்றலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
