
தாளத்திற்கு ஏற்றவாறு நலினமாக கைகள் மற்றும் கால்களையும் அழகு நேர்த்தியோடு ஆடும் கலைகளில் ஒன்று தான் நடனம் முந்தைய காலங்களில் இருந்து தற்போது வரை கோவில்கள் மற்றும் திருவிழாக்களில் பராம்பரிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தெந்த மாநிலத்தில் உள்ள சிறப்புகளைப் பிரதிபலிக்கும் விதமாக நாட்டிய கலைகள் அமையப் பெற்றுவருகிறது. இன்றைக்கு இந்தியாவில் மிகவும் பிரசிதிப்பெற்ற நாட்டிய கலைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பராம்பரிய நடனங்களில் மிகவும் பழமை வாய்ந்தது பரத நாட்டியம். புராண கதைகளில் பரதமுனிவரால் உருவாக்கப்பட்டது என்பதால் இதற்கு பரதம் என்று பெயர் வந்ததாகக கூறப்படுகிறது. பரதம் என்றால் ப பாவம், ர - ராகம், த -தாளம் என உணர்ச்சியை தாளம் மற்றும் ராகத்தோடு பிரதிபலிக்கும் கலையாக உள்ளது பரதம். பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னதாக மன்னர்கள் மற்றும் மக்களை மகிழ்விக்க ஆடிய கலைகளில் முக்கியமானது பரதம். செவ்விய ஆடல் வகைகளில் பரத நாட்டியமும் ஒன்று. சதிராட்டம் என்ற அறியப்பட்ட பரதம் நாளடைவில் பரத நாட்டியம் என்று பெயர் பெற்றது. தமிழகத்தில் உள்ள கோவில் சிற்பங்களில் பரத நாட்டியம் கலை வடிவமாக இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.
கேரள மாநிலத்தில் உள்ள பராம்பரிய நடனம் தான் கதகளி. வண்ணமயமான உடைகளை உடுத்தியதோடு முக பாவனைகள் மற்றும் கண் அசைவுகளோடு ஆடி பாடுவதோடு அதன் மூலம் கதைகளை சொல்லக்கூடிய அழகிய நடன கலை தான் கதகளி. பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் இருந்த பாரம்பரிய சடங்கு மற்றும் மத நாடக வடிவங்களில் இருந்து உருவானது. குறிப்பாக கேரளத்து மக்களின் பண்பாட்டையும் அவர்களது பெருமையையும் பறைசாற்றக்கூடிய நாட்டியமாக தற்போதும் தலைநிமிர்ந்து நிற்கிறது கதகளி
இந்தியாவில் உள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நாட்டியமாக உள்ளது கதக் நடனம். கதக் என்பது சமஸ்கிருத வார்த்தையான கதாவிலிருந்து தோன்றியது என்று கதா என்றால் கதை சொல்லும் என்று பொருள்படும். அதற்கேற்றால் போல் தன்னுடைய நடனத்தின் மூலம் ஏதாவது கதையை எடுத்துரைக்கும். கால்களை விதவிதமாக அசைத்தும் அதற்கேற்ற அழகிய சைகைகளை செய்வதும் தான் இதன் சிறப்பு. ஹிந்துஸ்தானி இசை இல்லாமல் கதக் நடனம் முழுமை பெறாது.
ஆந்திரா மாநிலத்தில் சிறப்பை பறைசாற்றும் கலை தான் குச்சிப்புடி. அழகிய பாவனைக்கும் ஆற்றல் மிகு நடனத்திற்கு பெயர் போன நாட்டிய கலைகளில் ஒன்றாகவும் ஆந்திராவில் குச்சிப்புடி என்ற கிராமத்தின் பெயரை இதற்கு சூட்டி இருப்பதாகவும் வரலாறுகள் கூறுகிறது.
உதயகிரி கோவில்கள் மற்றும் குகைகளில் உள்ள நடன சிற்பங்களிலிருந்து உருவான கலைகளில் ஒன்று ஒடிசி. ஒடிசாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாகவும் உள்ளது. அழகிய ஆடைகளோடு முகபாவனைகள் மற்றும் கை அசைவுகளோடு ஆன்மீக கதைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் நடனங்களில் ஒன்றாக உள்ளது ஒடிசி.
மேலும் படிக்க: பெண்களுக்கு குட் நியூஸ்; மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் - தமிழக அரசு
இதோடு மட்டுமின்றி பஞ்சாப்பின் பராம்பரிய நடனமான பாங்ரா, அசாம் மாநிலத்தின் சத்திரியா, மேற்கு வங்காளத்தின் சாவ் நடனம், கேரளத்தின் மோகினி ஆட்டம் போன்ற பல்வேறு நாட்டிய கலைகள் அந்தெந்நத மாநிலங்களின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டு இன்றளவும் தலை நிமிர்ந்து தன்னுடைய கலைகளை வளர்ந்து வருவது பெரும் சிறப்பு.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com