traditional sweet recipe of south india

Protein Rich Snacks : பொரி விளங்கா உருண்டை, பலரும் மறந்து போன பாரம்பரிய உணவிது!

நீங்கள் 80's அல்லது 90's கிட் ஆக இருந்தால், பொரி விளங்கா உருண்டையை சுவைத்து இருப்பீர்கள் அல்லது நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். சற்று ரீவைண்டு செய்து சிறு வயதிற்கு செல்வோமா…
Editorial
Updated:- 2023-07-28, 15:59 IST

அந்த காலம் என்று சொன்னால், நமக்கு வயசு அதிகம் போல் தோன்றும். நாம் ஸ்டைல் ஆக 80's கிட், 90's கிட் என்று சொல்லி கொள்ளவோம். நாம் சிறு பிள்ளையாக இருந்த சமயத்தில், பேக் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ் வகைகளை பார்ப்பது மிகவும் அரிது. வீட்டில் செய்யும் அதிரசம், முறுக்கு, ரவா உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை தான் பெரும்பாலும் நம்முடைய ஸ்னாக்ஸ் ஆக இருந்தன. அதிலும் இந்த பொரி விளாங்கா உருண்டையை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. 

பொரி விளங்காய், பொருள் விளங்காய், பொரிவிலங்கை என பல பெயர்கள் இதற்கு உண்டு. இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாம், எனவே இதற்கு பொருள் விளங்கா உருண்டை என்று பெயர் வந்ததாக வரலாறு சொல்கிறது. மறந்து போன இந்த இனிப்பு வகையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்கு பதிலாக குழந்தைகளுக்கு இது போன்ற சத்தான உணவுகளை செய்து கொடுங்கள். இப்போது பொரி விளங்கா உருண்டை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம்…

 

இந்த பதிவும் உதவலாம்: இதை விட ஈஸியா புட்டு செய்யவே முடியாது!

 

பொரி விளங்கா உருண்டை

தேவையான பொருட்கள்

porulvilanga urundai

  • இட்லி அரிசி - 1 கப்
  • வெல்லம் - ¾  கப்
  • பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
  • பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
  • வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்  
  • தேங்காய் - சிறிய துண்டு 
  • ஏலக்காய் - 2
  • நெய் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - ⅓ கப் 

செய்முறை

pori vilanga urundai

  • ஒரு கடாயை சூடாகி மிதமான தீயில் வைத்து அரிசியை வறுக்க வேண்டும்.
  • அரிசி கருகாமல், அதே சமயம் பொன்னிறமாக மாறும் வரை 5-7 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
  • இதனை ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
  • பின்பு இதே முறையில் பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையை மணம் வரும் வரை வறுத்து ஆறவிடவும். 
  • அடுத்ததாக  கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
  • தேங்காயை கடித்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள், இதற்கு பதிலாக தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்துடன் ⅓ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தூசி அல்லது மணல் இருந்தால் வடிகட்டிய பின் மீண்டும் கொதிக்க வைக்கவும். 
  • பாகு தயாராகும் சமயத்தில், ஒரு மிக்ஸர் ஜாரில் வறுத்து வைத்துள்ள அரிசி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை மற்றும் பாசிப்பருப்புடன் ஏலக்காயை சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
  • அரைத்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும். இதனுடன் நெய்யில் வறுத்த தேங்காயையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • வெல்ல பாகை நீரில் ஊற்றினால் உருட்டும் பதத்திற்கு வர வேண்டும், இதுதான் சரியான பதம். 
  • வெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக அரிசி பொடியுடன் சேர்த்து கிளறவும். ஒரே சமயத்தில் முழு வெல்லப்பாகையும் ஊற்றி விட வேண்டாம்.
  • பொடித்த கலவை மற்றும் வெல்ல பாகை நன்கு கலந்த பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • உருண்டைகளை உடனே பிடித்து விடுங்கள், ஆறினால் உருண்டை பிடிக்க வராது.

இந்த சத்தான புரதம் நிறைந்த பொரி விளங்கா உருண்டையை நீங்களும் உங்களுடைய வீட்டில் செய்து பாருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும், சோடா இல்லாமலே சூப்பரான பஜ்ஜி செய்யலாம்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com