herzindagi
image

பெண்களின் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆரோக்கிய உணவுகளின் லிஸ்ட்!

வைட்டமின் சி நிறைந்த உணவுகள், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது பெண்களின் தலைமுடி வேகமாக வளர உதவுகிறது. 
Editorial
Updated:- 2025-11-06, 22:39 IST

தலைமுடி ஆரோக்கியத்திற்கான உணவுகள்:

தலைமுடிக்கு புரதம் அதிகளவில் தேவைப்படுகிறது. உங்களது உணவில் போதுமான அளவு புரதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே உங்களது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால், முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நீளமான, கருமையான, அடர்த்தியான கூந்தலை பெற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய குறிப்புகள்

  • தலைமுடியின் செல்கள் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால் இரும்பு சத்து அத்தியாவசியமான ஒன்று. இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் போது தான், முடி உதிர்தல் பிரச்சனைகளை அதிகளவில் சந்திக்க நேரிடும். இது போன்ற சூழலில் நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரை உள்ளிட்ட அனைத்து வகையான கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • முடி வளர்ச்சியை அதிகரிக்க நீங்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முடி தண்டுகளுடன் இணைக்கும் நுண் குழாய்களை வலிமையாக்குகிறது. இதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் சீராக எடுத்துச் செல்வதற்கு உதவுவதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பானங்கள்; இவற்றை அருந்தும் போது கவனம் தேவை

  • கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயோட்டின் நிறைந்த தானியங்கள், உங்கள் முடி வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அன்றாட உணவு முறையில் இது போன்ற உணவுகளை நீங்கள் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பெண்களுக்கு தலைமுடி விரைவாக வளர வேண்டும் என்றால், வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தினமும் நீங்கள் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் ஜுஸைக் குடிக்க வேண்டும். இது செல்லின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

  • முடி ஆரோக்கியத்திற்கு உதவும் அற்புதமான உணவு முறையில் ஒன்றாக உள்ளது தயிர். இதில் உள்ள நிறைய புரதம், பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊ ட்டச்சத்து க்கள் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.

இது போன்று பெர்ரி பழங்கள், பீன்ஸ், மீன் போன்ற உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

Image source - Freep

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com