herzindagi
karpooravalli bajji for rainy season

No Soda karpooravalli Bajji : இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும், சோடா இல்லாமலே சூப்பரான பஜ்ஜி செய்யலாம்!

மழைக்காக காத்திருக்க வேண்டாம், பஜ்ஜி சாப்பிட வேண்டும் என்ற ஆசை எட்டி பார்த்தாலே, உடனே செஞ்சு சாப்பிடுங்க!
Editorial
Updated:- 2023-07-27, 13:45 IST

இந்த பிரெஞ்சு ஃபிரைஸ், சிப்ஸ் எல்லாத்தையும் ஓரம் கட்டிவிடும் பண்டம் தான் பஜ்ஜி. அதிலும் டீ கடை பஜ்ஜி வேர லெவல். வீட்டில் அப்பா, தாத்தா யாராவது காலையில வாக்கிங் போய்விட்டு திரும்ப வரும் பொழுது வாங்கி வந்தால் ஒரே கொண்டாட்டம் தான். எண்ணெயில் பொரித்தது, பாம் ஆயிலில் செய்தது, நியூஸ் பேப்பரில் சுற்றி கொடுத்தது எதை பற்றியும் கவலை இல்லாமல் சாப்பிட்ட அழகிய நாட்கள் அவை. 

ஆனால் இன்றோ தண்ணீரை கூட வெளி இடத்தில் குடிக்க சற்று பயமாகவே உள்ளது. அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை பார்த்து பார்த்து வாங்குகிறோம். மைதா, சோடா, வெள்ளை சர்க்கரை போன்ற பொருட்களுக்கு பதிலாக ஆரோக்கியமான மாற்றுகளை பயன்படுத்தலாம். உதாரணமாக பஜ்ஜியை கூட ஆரோக்கியமானதாக செய்ய முடியும். இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறீர்களா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள கற்பூரவள்ளி பஜ்ஜியை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வித குற்ற உணர்வுமின்றி செய்து கொடுக்கலாம். இது சளிக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் சோடா சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இனி எந்த பஜ்ஜி செய்தாலும் சோடாவிற்கு பதிலாக பதிவில் பகிரப்பட்டு உள்ள அந்த சீக்ரெட் பொருளை பயன்படுத்துங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்:  இதை விட ஈஸியா புட்டு செய்யவே முடியாது! 

 

தேவையான பொருட்கள் 

rainy day snack

  • கடலை மாவு - 1 கப் 
  • அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் 
  • மிளகாய் பொடி - 1 டீஸ்பூன் 
  • மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன் 
  • பெருங்காயம் - ¼ டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • தோசை மாவு - 1 குழி கரண்டி 
  • கற்பூரவள்ளி இலைகள் - 10
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை 

healthy karpooravalli bajji

  • முதலில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, ஈரம் இல்லாமல் உலர வைத்துக் கொள்ளவும். 
  • பஜ்ஜி மாவு தயார் செய்வதற்கு ஒரு அகண்ட பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு மற்றும் தோசை மாவு சேர்த்து நன்கு கலக்கவும். 
  • இந்த பஜ்ஜி செய்வதற்கு ஃபுட் கலர் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மஞ்சள் மற்றும் மிளகாய் பொடி தரும் இயற்கை நிறமே போதுமானது. 
  • மேலும் இதில் தோசை மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவான பஜ்ஜி கிடைக்கும். 100% இது சோடா சேர்த்து செய்த பஜ்ஜியை போலாவே இருக்கும். இனி எந்த பஜ்ஜி செய்தாலும் சோடாவிற்கு பதிலாக ஒரு கரண்டி தோசை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • தோசை மாவில் உப்பு இருக்கும், எனவே பஜ்ஜி மாவில் அதற்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் பஜ்ஜி மாவு தயார் செய்து கொள்ளவும்.  
  • ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.  
  • எண்ணெய் சூடானவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கற்பூரவள்ளி இலைகளை பஜ்ஜி மாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 
  • சுட சுட பஜ்ஜி, ஒரு டம்ளர் காபி! மழையை ரசித்தபடி உண்டு மகிழுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com