herzindagi
anemia recipe by expert

Anemia Recipes : உடலில் இரத்தம் வேகமாக ஊற இந்த 3 ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க!

இரத்த சோகையை போக்க, உடலில் இரத்தம் வேகமாக ஊற நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த 3 ரெசிபிகளை முயற்சி செய்யுங்கள்…
Editorial
Updated:- 2023-07-13, 18:30 IST

ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். நுரையீரலில் இருந்து மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் சோர்வு தலைசுற்றல், தலைவலி, மார்பு வலி, இதய பாதிப்புகள், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை உணரலாம்.  

இரத்த சோகையை உணவின் மூலமாக சரி செய்வது மிகவும் சுலபம். இதற்கான சில எளிய ரெசிபிக்களை உணவியல் நிபுணரான மன்ப்ரீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உடலில் இரத்த ஊற, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த மூன்று ரெசிபிகளும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

 

இந்த பதிவும் உதவலாம்:  இந்த ஓட்ஸ் ஸ்மூத்தி, உங்கள் எடை இழப்பை எளிதாக்கும்!

 

ரெசிபி 1 : பீட்ரூட் பச்சடி 

anemia recipe ()

தேவையான பொருட்கள் 

  • பீட்ரூட் - 2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
  • புதினா இலைகள் 6-7
  • கல் உப்பு - 1 சிட்டிகை
  • மிளகு பொடி - 1 சிட்டிகை
  • சப்ஜா விதை - 1 டீஸ்பூன் (ஊறவைத்தது ) 

செய்முறை

  • முதலில் தயிரை நன்கு அடித்து தயாராக வைக்கவும். 
  • பீட்ரூட்டை துருவி அடித்து வைத்துள்ள தயிருடன் சேர்க்கவும். 
  • இதனுடன் கல்லுப்பு, நறுக்கிய புதினா இலைகள் மற்றும் மிளகு பொடி சேர்க்கவும். 
  • கடைசியாக ஊறவைத்த சப்ஜா விதைகளை சேர்த்து சாப்பிடலாம். 

ரெசிபி 2 : இளநீர் பானம்  

anemia recipe ()

தேவையான பொருட்கள் 

  • சாலியா விதை - ¼ டீஸ்பூன் 
  • சப்ஜா விதை - ¾ டீஸ்பூன் 
  • இளநீர் - 1 

செய்முறை 

ஊறவைத்த சாலியா மற்றும் சப்ஜா விதைகளை இளநீருடன் சேர்த்து குடிக்கவும். 

ரெசிபி 3 : இரும்பு சத்து பானம் 

anemia recipe ()

தேவையான பொருட்கள் 

  • நெல்லிக்காய் - 1/2
  • கொத்தமல்லி இலைகள் 4-5
  • தண்ணீர் - 50 மில்லி 
  • முருங்கைப்பொடி - 1 சிட்டிகை 
  • கல் உப்பு - 1 சிட்டிகை 

செய்முறை 

  • நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  
  • இதனுடன் முருங்கை இலை பொடி மற்றும் கல்லுப்பு சேர்த்து கலந்து குடிக்கவும். 
  • இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த 3 ரெசிபிகளையும் நிச்சயம் முயற்சி செய்யலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்:  வேகவைத்த முட்டையில் சுக்காவா, கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com