இதயம் இல்லையென்றால் எதுவும் இயங்காது. ஆம் நமது உடலில் உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் சீராக இயங்குவதற்கு வழிகாட்டியாக இருப்பது இதயம். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற பல்வேறு உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலும் உயரிய சிகிச்சை முறையில் சரி செய்து விடலாம். அதுவே இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவு தான். ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை இல்லையென்றால் மரணம் தான் முடிவாக அமையும். இதற்கேற்றால் போல் தான் இன்றைக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய நோய் பாமிப்பால் உயிரிழக்கும் அவலம் ஏற்படுகிறது.
இதுபோன்ற இதய நோய் பாதிப்புகளைத் தவிர்க்கவும், இதய நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இதயத்தைப் பாதுகாக்க செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: நீங்கள் செய்யும் சில தவறுகள் வயிற்றில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
இதயத்தைச் சுற்றியிருக்கும் இரத்த நாளங்களில் அடைப்பு, தசைகளால் ஏற்படும் பாதிப்பு, இதயத் துடிப்புகளில் ஏற்படும் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் இதய நோய் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகின்றனர். இவற்றைத் தவிர்க்க அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதிகப்படியான உடல் எடையும் இதய நோய் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக அமையும். எனவே உடல் எடையை ஒவ்வொருவரும் அவர்களது உயரத்திற்குத் தகுந்தவாறு சீராக வைத்துக் கொள்ளுதல் அவசியம். அதிக உடல் எடைக் கொண்டிருக்கும் போது உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் சேர நேரிடும். கொழுப்புகள் அதிகளவில் படிவதால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். எனவே எப்போதும் உடல் எடையை சரியாக நிர்வகிக்க வேண்டும்.
மேலும் படிக்க: World heart day: உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமானால் இந்த உணவுகளை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்
மேற்கத்திய உணவுகளை என்றைக்கு மக்கள் தங்களின் வாழ்க்கை முறையில் பின்பற்ற ஆரம்பித்தார்களோ? அன்றைய நாளிலிருந்தே பல்வேறு நோய் பாதிப்புகளை மக்கள் விலைக் கொடுத்து வாங்க ஆரம்பித்துவிட்டனர். இதைத் தவிர்ப்பதற்கு நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய உணவுகள் தான் சிறந்த தேர்வாக உள்ளது. கம்பு,கேப்பை, தினை, வரகு, குதிரை வாலி போன்ற சிறு தானிய உணவுகளை வாரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
வேலைப்பளுவால், குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைக்கு மிகப்பெரிய உயிர்க்கொல்லி பாதிப்பாக உருவெடுத்துள்ளது உயர் இரத்த அழுத்தம். குறிப்பிட்ட அளவை விட அளவுக்கு அதிகமாக இரத்த ஓட்டம் உடல் உறுப்புகளுக்குப் பாயும் போது இதயம் சீராக செயல்படாது. சட்டென்று மாரடைப்பு ஏற்படக்கூடிய சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுவோம். எனவே இதயத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதோடு அதிகப்படியான கொழுப்புகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக 30 வயதைக் கடந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்வது அவசியம்.
நீச்சல், ஜாக்கிங் வாரத்திற்கு கட்டாயம் ஐந்து நாட்கள் அதாவது 150 மணி நேரங்கள் செலவழிக்க வேண்டும். இந்த உடற்பயிற்சிகள் நமது உடல் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாகவும் இயங்க பேருதவியாக உள்ளது. இதோடு அதிகப்படியான மன அழுத்தமும் இதய நோய் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக அமையும் என்பதால் மன அழுத்தம் இன்றி வாழ வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் கட்டாயம் கைவிட வேண்டும். புகைப்பிடிக்கும் போது நிக்கோடின் இதயத்தில் உள்ள அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பை ஏற்படுத்தும். மரபணு ரீதியாகவும் இதய நோய் பாதிப்பு ஏற்படும் என்பதால் இளம் வயதிலேயே கட்டாயம் இதய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com