herzindagi
image

மாடித் தோட்டம் வைத்திருப்பவரா நீங்கள்? இந்த காய்கறிகளை இப்போதே விதைத்து குளிர் காலத்தில் அறுவடை செய்யலாம்

உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் குளிர் காலத்தின் போது அறுவடை செய்வதற்கு ஏற்ற காய்கறி வகைகளை இதில் காண்போம். சீரான பராமரிப்பு இருந்தால் இந்தக் காய்கறிகள் நன்கு செழித்து வளரும்
Editorial
Updated:- 2025-10-08, 13:10 IST

மாடித் தோட்டத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு குளிர்காலம், ஒரு சிறந்த பருவமாகும். இந்த காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும். மேலும், சூரிய ஒளி மென்மையாக இருக்கும். இந்த சூழல் பல காய்கறிகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது. 

மேலும் படிக்க: மாதுளை வளர்ப்பு: வீட்டிலேயே ஆரோக்கியமான பழங்களை அறுவடை செய்வது எப்படி?

 

சரியான காய்கறி வகைகளை தேர்ந்தெடுத்து, நல்ல மண் பயன்படுத்தி, சீரான நீர்ப்பாசனம் மற்றும் குளிர்-பனியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தால், சிறிய தொட்டிகளில் கூட சிறந்த அறுவடையை நிச்சயம் பெறலாம். இப்போது விதைத்தால், குளிர்காலத்தில் அறுவடைக்கு தயாராகும் காய்கறிகள் குறித்து இதில் பார்க்கலாம்.

 

பசலைக்கீரை:

 

பசலைக்கீரை குளிர்ச்சியான காலநிலையில் செழித்து வளரும். இது லேசான பனியையும் தாங்கும் திறன் கொண்டது. இதனை நேரடியாக தொட்டிகள் அல்லது குரோ பேக்குகளில் (Growbag) விதைக்கலாம். இது வேகமாக வளரும் ஆற்றல் கொண்டது. சுமார் 30 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். குளிர்ச்சியான சூழலில் இது நன்கு வளர்ந்தாலும், சில மணி நேரம் சூரிய ஒளி தேவைப்படும். இதன் மூலம் கீரையின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

Spinach

 

கேரட்:

 

கேரட் போன்ற வேர்க்காய்கறிகளுக்கு தளர்வான, நீர் தேங்காத மண் அவசியம். விதைகளை நேரடியாக விதைத்து, முளைக்கும் வரை மண்ணை ஈரமாக வைத்திருங்கள். இந்தக் குளிர்ச்சியான காலகட்டத்தில் வளரும் கேரட்கள் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். தொட்டிகளுக்கு ஏற்ற குட்டையான வகை கேரட்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

மேலும் படிக்க: Chia seeds: சியா விதைகளை வீட்டிலேயே ஈசியாக வளர்க்கலாம்; இந்த 5 குறிப்புகளை மட்டும் பின்பற்றவும்

 

பட்டாணி:

 

குளிர்காலத்தின் குளிர்ச்சியான பகுதிகளில் வளர்க்க பட்டாணி மிகவும் ஏற்றதாகும். வெப்பத்தை விரும்பாத பட்டாணி விதைகளை இப்போது விதைத்தால் அவை நன்கு வளரும். நன்றாக குளிர்ந்த காலநிலையில் காய்கள் உருவாகும். அவை முழுமையாகவும், உறுதியாகவும் ஆன பிறகு அறுவடை செய்யலாம்.

 

காலிஃப்ளவர்:

 

காலிஃப்ளவருக்கு சற்று நீண்ட வளர்ச்சி காலம் தேவை. விதைகளை முதலில் சிறிய தொட்டிகளில் விதைத்த பின்னர், அவற்றை பெரிய தொட்டிகளில் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முழு சூரிய ஒளி, குளிர்ந்த காலநிலை மற்றும் சீரான ஈரப்பதம் தேவை. சரியான முறையில் பராமரிப்பு இருந்தால் இவை நன்கு வளரும்.

 

வெங்காயம்:

 

குளிர்ச்சியான காலநிலையில் நடவு செய்ய ஏற்றதாக வெங்காயம் அமைந்துள்ளது. அதன்படி, இந்த நேரத்தில் வெங்காய விதைகளை நடவு செய்யலாம். இதற்கு சரியான வடிகால் வசதியுள்ள தொட்டிகள் அவசியம். இப்போது நடவு செய்யப்படும் வெங்காயம் குளிர்காலத்தில் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராகும்.

Onion plant

 

குடைமிளகாய்:

 

குளிர்கால தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற முறையில் குடைமிளகாயின் வளர்ச்சி இருக்கும். இவற்றை இப்போது சிறிய தொட்டிகளில் நட்டு, சூரிய ஒளி இருக்கும் இடத்தில் வைத்து விடலாம். இதன் அறுவடை, குளிர்காலத்தின் பிற்பகுதியில் இருக்கும். அதுவரை சரியான பராமரிப்பு பணிகள் தேவைப்படும்.

 

இதுபோன்று ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ற காய்கறிகளை நமது மாடித் தோட்டத்தில் அறுவடை செய்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com