herzindagi
image

அனைவரும் விரும்பிச் சாப்பிடும் டீ க்கு இன்னும் கூடுதல் சுவை கொடுக்கணுமா? அப்ப இதை மட்டும் செய்யுங்க

நம்மில் பலருக்கு மன நிம்மதியைக் கொடுக்க பேருதவியாக இருக்கும் டீக்கு கூடுதல் சுவைக் கொடுக்க வேண்டும் என்றால் டீத்தூள் மற்றும் பால் 1:1 என்ற சதவிகிதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-10-02, 23:27 IST

வீட்டில் மற்றும் அலுவலகத்தில் ஏற்படக்கூடிய எத்தனையோ பிரச்சனைகளை அசால்டாக சமாளிக்கும் பலர் கட்டாயம் டீ பிரியர்களாகத் தான் இருக்க முடியும். ஆம் பல பிரச்சனைகளால் மன அழுத்தம் ஏற்படும் போது அத்தனையும் மறந்து டீ மீது மட்டும் கவனம் செலுத்தும் பலரைப் பார்த்திருப்போம். இப்படி மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ள டீ க்கு எப்படி கூடுதல் சுவையைக் கொடுக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்த டிப்ஸ்கள்.

மேலும் படிக்க: ஆரோக்கியம், சுவை நிறைந்த பாதாம் அல்வா;  ஒரு முறை இப்படி செய்துப் பாருங்கள் !

  • வீட்டில் எப்போது டீ தயார் செய்தாலும் முதலில் கவனிக்க வேண்டியது டீ தூளைத் தான் சரியான தேநீர் தூள்களைத் தேர்வு செய்தால் மட்டுமே எப்படி போட்டாலும் டீ சுவையோடு இருக்கும்.
  • அடுத்ததாக பால் மற்றும் தண்ணீரை எப்போதும் 1:1 என்ற விகித்தில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். அதறக்காக அதிக நேரம் கொதிக்க விட வேண்டும் என்ற அவசியமில்லை. நீண்ட நேரம் கொதித்தால் அதன் சுவை மாறிவிடும். எனவே ஒரு 10 நிமிடத்திற்கு மேல் கொதிக்க தேவையில்லை. சரியான நேரத்தில் வடிகட்டுவது நல்லது. அதிக நேரம் கொதிக்கும் போது அதன் சுவையைக் குறைப்பதோடு கசப்புத்தன்மையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க: அதிக நேரம் எடுக்காது; சீக்கிரமாக சுவையான ஆப்பிள் பாயாசம் செய்யலாம்;  எளிய சமையல் குறிப்புகள் இதோ!

  • டீக்கு கூடுதல் சுவையைக் கொடுக்க வேண்டும் என்றால் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம். சுவையோடு நல்ல வாசனையையும் கொடுக்கும். டீத்தூளில் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போடலாம் அல்லது துருவிக் கொள்வது நல்லது.
  • எப்போதும் சாதாரண டீ குடிக்க பிடிக்கவில்லையென்றால் மசாலா டீயைப் பருகவும். இதற்கு ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பருகவும்.
  • சுவையை மேம்படுத்த:
  • வழக்கமான டீயுடன் இஞ்சி சேர்ப்பதற்குப் பதிலாக கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்க்கலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் டீக்கு சுவையைக் கொடுப்பதோடு நல்ல புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடும்.
  • சர்க்கரை சரியான அளவில் போட வேண்டும். ஒரு சிலர் டீக்கு சர்க்கரை சேர்ப்பதை விரும்பமாட்டார்கள். சிலருக்கு அதிகமாக பிடிக்கும். எனவே எப்போதும் 2 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரைப் பயன்படுத்த வேண்டாம்.


மேலும் படிக்க: அவல் வைத்து ருசியாக வடை செய்யலாம் வாங்க; எளிய செய்முறை விளக்கம் இங்கே!

  • மேற்கூறிய முறைகளில் டீத்தூளுடன் பல்வேறு மசாலாப் பொருட்களைச் சேர்த்துக் கொதித்து வடிகட்டிய பின்னதாக மீண்டும் கொதிக் வைத்து பருகலாம். இது சுவையை அதிகரிக்கும்.
  • டீத்தூள் நன்கு கொதிக்கும் முன்னதாக ஏலக்காய்யை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பால் கொஞ்சம் அதிகமாக சேர்க்கும் போது சுவையும் அதிகமாகும்.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com