herzindagi
image

தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் முகத்தைப் பொலிவாக்கும் காபி பேஸ் மாஸ்க்!

முகத்தில் சுருக்கம், கரும்புள்ளிகள், வறண்ட சருமம், முகப்பருக்கள் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண காபி பேஸ் மாஸ்க் பேருதவியாக இருக்கும்.  
Editorial
Updated:- 2025-10-14, 23:22 IST

வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் முதல் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்கள் வந்தாலே புத்தாடைகள் வாங்குவதோடு, பெண்கள் தங்களது முகத்தை எப்படி பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்ற தேடலில் ஈடுபடுவார்கள். இவர்களுக்காக பல்வேறு அழகுநிலையங்களில் பண்டிகை நாள்களில் ஆஃபர்களை அள்ளிக்குவிப்பார்கள். ஆனால் இனி கவலை வேண்டாம். வீட்டில் உள்ள காபி தூள் ஒன்று போதும். எப்படி காபி பேஸ் பேக் தயார் செய்யலாம்? என்பது குறித்த சிம்பிள் டிப்ஸ்கள் இங்கே.


மேலும் படிக்க: Fashion Tips: உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஆடை வண்ணங்கள் எது? சரியான ஆடைகளை தேர்ந்தெடுக்க டிப்ஸ் இதோ

முகத்தைப் பொலிவாக்கும் காபி பேஸ் பேக்:

 தேவையான பொருட்கள்:  

  • காபி தூள் - 3 டீஸ்பூன்
  • நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
  • தேன் - 1 டீஸ்பூன்
  • பால் - சிறிதளவு

 

காபி பேஸ் மாஸ்க் தயார் செய்யும் முறை:

முகத்தைப் பொலிவாக்க காபி பேஸ் மாஸ்க் தயார் செய்கிறீர்கள் என்றால், முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் காபி தூள், தேன், பால், ஆலிவ் எண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை போன்றவற்றை நன்கு கலந்துக் கொண்டு ஸ்கரப் போன்று தயார் செய்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: தினமும் சேலை கட்டுவீங்களா? இந்த ஃபேஷன் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க அழகா இருப்பீங்க

இதை முகத்தில் வாரத்திற்கு இருமுறை தடவி நன்கு காய்ந்த பின்னதாக குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு ஒரு மாத காலத்திற்கு மேலாக செய்து வரும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் எப்போதும் பிரகாசமாக இருக்க உதவியாக இருக்கும். முகம் மட்டுமல்ல கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறத்தை நீக்க வேண்டும் என்றாலும் காபி தூளைக் கொண்டு தயார் செய்யப்படும் பேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். 

 

முகத்தைப் பொலிவாக்க காபி தூள் எப்படி உதவுகிறது?

காபி தூளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளதால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி முகப்பரு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதோடு நாட்டு சர்க்கரை மற்றும் தேனில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அகற்றி முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. பாலில் உள்ள கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவான நிறத்தை அளிக்கிறது. 






 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com