herzindagi
image

தீபாவளி பலகாரம்: வாயில் பட்டவுடன் கரையும் மைசூர்பாகு செய்யலாம் வாங்க!

மைசூர் பாகு செய்யும் செய்யும் போது ஒரு பங்கு கடலைமாவுடன் இரண்டு பங்கு பாசிப்பருப்பு மாவு சேர்த்து பிசையும் போது மென்மையாகவும், கடாயில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்.
Editorial
Updated:- 2025-10-12, 21:45 IST

தீபாவளி என்றாலே பலகாரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் இனிப்பு, காரம் என விதவிதமாக பலகாரங்கள் செய்வார்கள். குலோப் ஜாமூன், அதிசரம் போன்றவற்றை அதிகளவில் செய்வார்கள். மைசூர் பாகு போன்ற மற்ற பலகாரங்களை வீட்டில் செய்வது பலருக்குத் தெரியாது. இதோ உங்களுக்காக வாயில் பட்டவுடன் எளிதில் கரையக்கூடிய மைசூர் பாகு எப்படி செய்யலாம்? என்பது குறித்த எளிய டிப்ஸ் உங்களுக்காக..

மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே! 

அதீத சுவையைக் கொடுக்கும் மைசூர் பாகு:


தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு - 2 கப்
  • நெய் - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • சர்க்கரை - 4 கப்

மைசூர் பாகு செய்முறை:

  • மைசூர் பாகு செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக் கொள்ள வேண்டும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகாமல் பிசைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து அடிகனமான கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து கிளறிக் கொள்ள வேண்டும். சர்க்கரை பாகு பதத்திற்கு வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக கடலை மாவு சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கரண்டியால் அழுத்திக்கொண்டே இருக்கவும்.

  • சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு செய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய்யை நன்கு கிளறி விட்டே இருக்கவும். இதையடுத்து கடாயில் கிளறி வைத்துள்ள மைசூர் பாகுவை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து மைசூர் பாகு நன்கு பொங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு டிரேவிற்கு மாற்றவும். நன்கு அழுத்தி விடக்கூடாது. கொஞ்சம் சூடு ஆறியதும் பீஸ் போட்டால் போதும் சுவையான மைசூர் பாகு ரெடி.

குறிப்பு: மைசூர் பாகு செய்யும் செய்யும் போது ஒரு பங்கு கடலைமாவுடன் இரண்டு பங்கு பாசிப்பருப்பு மாவு சேர்த்து பிசையும் போது மென்மையாகவும், கடாயில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்.

Image source- Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com