herzindagi
image

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் பங்களிக்கும் எண்ணெய் மசாஜ்; செய்யும் முறை!

குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்யும் போது அவர்களின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக அமையும்.  
Editorial
Updated:- 2025-11-01, 21:58 IST

குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலான விஷயம். பிறந்த நாள் முதல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் குடிக்க எழுந்திருப்பது முதல் வானிலை ஏற்ப குழந்தைகளைப் பராமரித்துக் கொள்வது பெரும் சிரமம். இது மட்டுமின்றி தினமும் எண்ணெய் மசாஜ் செய்வது குழந்தைகளைக் குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு எந்தளவிற்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கிறீர்களோ? அந்தளவிற்கு உடல் நலத்துடன் இருக்கும். இன்றைக்கு குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்? எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: குழந்தைகளின் சாக்லேட் ஆசையை மறக்க செய்யணுமா? அப்ப இதை மட்டும் கட்டாயம் செய்திடுங்க!

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

குழந்தைப் பிறந்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களில் இருந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தொடங்கலாம். நிறை மாதத்தில் பிறந்தால் குறை பிரசவத்தில் பிறந்தாலும் எண்ணெய் மசாஜ் செய்யலாம். இதனால் குழந்தைகளுக்கு உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராவதோடு அரிப்பு, அலர்ஜி போன்ற சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை. இதோடு மட்டுமின்றி குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.

மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்


எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?

குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் அதிக விலைக் கொடுத்து அதற்குரிய பிரத்யேக எண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் சுத்தமான செக்கு எண்ணெய் பயன்படுத்தினால் நல்லது. தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தும் போது சருமத்திற்கு சிறந்தாக இருக்கும். ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது குழந்தைகளுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். நல்லெண்ணெய்யைக் கொண்டும் மசாஜ் செய்யலாம்.



பயன்படுத்தும் முறை:

குழந்தைகளுக்க எண்ணெய் மசாஜ் செய்ய ஆரம்பிக்கும் போது, முதலில் படுக்கையில் குழந்தையைப் படுக்க வைத்துக் கொள்ளவும்.பின்னர் கைகளில் எண்ணெய்யை நன்கு தடவி மெதுவாக உடல் முழுவதும் மசாஜ் செய்யவும்.

 Image source - Freepik

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com