பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ள உறவுகள் அனைவருக்கும் சந்தோஷமான மனநிலையைக் கொடுக்கும் உன்னத நாளாக அமையும். ஆம் நம்முடன் சேர்ந்து பயணிக்க இன்னொரு உயிர் வருவது என்றால், அதைப் பெற்றெடுக்க அம்மாக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனாலும் அனைவரின் சந்தோஷத்திற்கான வீட்டின் வாரிசுகளைப் பெற்றெடுக்கிறார்கள். இப்படி சிரமத்துடன் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது மட்டுமல்ல அவர்களை ஒரு வயது வரை வளர்ப்பதற்கு என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலான காலக்கட்டம்.
பருவநிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். இதோடு மட்டுமின்றி குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்குக் கட்டாயம் அவர்களது உணவு முறைகளில் அக்கறையுடன் இருக்க வேண்டும். உங்களது குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்க வேண்டும்? எந்தெந்த மாதத்தில் என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்
9 மாத கருவில் இருந்து வெளியே வரும் குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சுகப்பிரவசம் என்றால் ஒரு அரை மணி நேரத்திற்குள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க சொல்லிவிடுவார்கள். அதே சமயம் சிசேரியன் என்றால் மயக்க நிலையில் அம்மாக்கள் இருக்கும் சூழல் ஏற்படும். எப்போது நினைவு திரும்புகிறதோ? அப்போதிருந்து கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் ஒரு வார காலத்திற்குத் தாய்ப்பால் சுரப்பு அவ்வளவாக இருக்காது. எனவே குழந்தைகள் எவ்வளவு குடிக்கிறார்கள்? என்பது தெரியாது. எனவே ஆரம்பத்தில் தாய்ப்பாலை பீய்ச்சி சங்கில் வைத்து குடிக்கவும். ஒருமுறை மார்பகத்தில் குடிக்க விட்டால் அடுத்த 2 மணி நேரத்திற்குப் பிறகு தாய்ப்பாலை சங்கில் கொடுக்கவும். இப்படி முதல் மாதத்தில் இருந்து 6 மாத காலங்கள் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் கண்டிப்பாக கொடுக்ககூடாது.
மேலும் படிக்க: கடுமையான பணிச்சூழலிலும் வீட்டில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உதவும் குறிப்புகள்
குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்குப் பின்னதாக அரிசி மற்றும் பொரிகடலை, ஒரு பாதாம் போன்றவற்றை வறுத்து மாவாக்கிக் கொண்டு அதை கஞ்சியாக காய்ச்சிக் கொடுக்கலாம். அரிசி மற்றும் பொரிகடலையில் உள்ள கார்போஹைட்ரேட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அடுத்ததாக ஒரு தேக்கரண்டி அளவு மசித்த சாதம், பால் கலந்த இட்லி, மசித்த கேரட், உருளைக்கிழங்கு, வேக வைத்த ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
6 மாத காலத்திற்குப் பின்னதாக மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். நன்கு வேக வைத்த சிக்கன் அல்லது மட்டன் இரண்டு துண்டுகள் அல்லது அதன் சாறை சாதத்துடன் சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டிவிடலாம். 8 மாத தொடக்கத்தில் இருந்து 10 மாதங்கள் வரை கொஞ்சமாக அரிசி பார்லி, கோதுமை, புரோட்டின் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றைக் கொடுக்கலாம். 10 முதல் 12 மாதம் வரை அதாவது ஒரு வயது வரை குழந்தைகளுக்கு எவ்வித தயக்கம் இல்லாமல் அனைத்து வகையான உணவுகளைக் கொடுக்கலாம். அதே சமயம் அளவுக்கு அதிகமாக கொடுக்கக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com