சுவையான ஆற்காடு மக்கன் பேடா ஸ்வீட் ருசித்திட இதுவே செய்முறை

200-300 ஆண்டு பழமையான ஆற்காடு மக்கன் பேடா ஸ்வீட் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்ப்போம். ஆற்காடு மக்கன் பேடாவிற்கும் குலாப் ஜாமுனுக்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வாயில் வைத்தாலே கரையக்கூடியது இந்த ஆற்காடு மக்கன் பேடா ஸ்வீட்.
image

முன்னாள் வேலூர் இந்நாள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் வரும் ஆற்காட்டின் அடையாளமாக மக்கன் பேடா ஸ்வீட்டை குறிப்பிடலாம். ஆற்காடு மக்கன் பேடா அங்கு ஆட்சி செய்த நவாப்களின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சுவீட் சுமார் 200-300 ஆண்டு பழமையானதாகும். பார்ப்பதற்கு குலாப் ஜாமுன் போல் தெரிந்தாலும் ஆற்காடு மக்கன் பேடா சுவையில் தனித்துவமானது. மைதா மாவு, வெண்ணெய், கெட்டி தயிர் வைத்து, சர்க்கரை பாகு கொண்டு ஆற்காடு மக்கன் பேடா தயாரிக்கப்படுகிறது. கோடை விடுமுறையில் வீட்டில் சேட்டை செய்யும் குழந்தைகளுக்கு ஆற்காடு மக்கன் பேடா செய்து கொடுத்து அன்பால் கட்டிப் போடுங்கள். வாருங்கள் ஆற்காடு மக்கன் பேடா எப்படி செய்வது என பார்ப்போம்.

makkan peda recipe

ஆற்காடு மக்கன் பேடா செய்ய தேவையானவை

  • மைதா மாவு
  • இனிப்பு இல்லாத கோவா
  • வெண்ணெய் / நெய்
  • சர்க்கரை
  • தண்ணீர்
  • ஏலக்காய் தூள்
  • முந்திரி
  • பாதாம்
  • குங்குமப் பூ
  • வால்நட்
  • சமையல் சோடா
  • கெட்டி தயிர்

ஆற்காடு மக்கன் பேடா செய்முறை

  • முதலில் சர்க்கரை பாகு தயாரிக்கலாம். கடாயில் 250 மில்லி அளவில் மூன்று கப் சர்க்கரை போட்டு அதே அளவில் தண்ணீர் ஊற்றவும்.
  • சர்க்கரை கரைந்த பிறகு 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு பாகு தயாரிக்கவும்.
  • ஒரு கம்பி பதத்தை எட்டும் நேரத்தில் இரண்டு கிராம் குங்கும பூ, அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் போட்டு கலந்து அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்.
  • பவுலில் ஒரு கப் மைதா, ஒரு ஸ்பூன் சமையல் சோடா, அரை கப் இனிப்பில்லாத கோவா, ஐந்து ஸ்பூன் வெண்ணெய், கால் கப் கெட்டி தயிர் சேர்த்து மாவு பிசையவும்.
  • சப்பாத்தி, பூரி மாவு போல் பிசைய அவசியமில்லை. மெதுவாக நேரம் எடுத்து மாவு பிசையவும்.
  • வெண்ணெய் இல்லாத பட்சத்தில் அதே அளவு நெய் பயன்படுத்தவும். தண்ணீர் பயன்படுத்த கூடாது.
  • உள்ளே ஸ்டஃப்பிங் செய்வதற்கு கோவா, முந்திரி, பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை பொடிதாக நறுக்கி குங்கும பூ சேர்த்துக் கொள்ளவும்.
  • ஆற்காடு மக்கன் பேடா தயாரிக்க பிசைந்த மாவை இரட்டை கோலி குண்டு சைஸில் உருட்டி உள்ளே ஸ்டஃப்பிங் செய்து சிறிய சைஸ் வடை போல் உள்ளங்கையில் வைத்து தட்டவும்.
  • கடாயில் அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி இந்த மாவினை போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுத்து சர்க்கரை பாகில் போடவும்.
  • 8 மணி நேரம் பாகில் ஊறிய பிறகு ஆற்காடு மக்கள் பேடா ருசிக்க தயாராகிவிடும்.

மேலும் படிங்கஅக்ரா பேடா ஸ்வீட் ருசிக்கணுமா ? தடியங்காய் வாங்கி இப்படி செஞ்சு பாருங்க

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP