தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் இரயில்களில் ஜான்ஸி தாண்டியதும் ஆக்ரா பேடா ஆக்ரா பேடா என கூவி கூவி விற்பார்கள். ஒரு ஸ்வீட் பாக்ஸ் 100 ரூபாய்க்கு விற்பார்கள். ஆக்ரா பேடா வெள்ளை, மஞ்சள், பச்சை நிறங்களில் காணப்படும். இது தேங்காய் பர்பி போல இனிப்பாகவும் உள்ளே ஜூஸியாகவும் இருக்கும். தடியங்காய் என்றழைக்கப்படும் சாம்பல் பூசணி வைத்து இந்த ஆக்ரா பேடாவை தயாரிப்பார்கள். ஆக்ராவில் தாஜ்மஹாலை காண செல்வோர் ஆக்ரா பேடா இன்றி வீடு திரும்ப மாட்டார்கள். இதை வாங்குவதற்கு ஆக்ரா வரை வர வேண்டிய அவசியமில்லை. தடியங்காய் இருந்தால் வீட்டிலேயே செய்யலாம். வாருங்கள் ஆக்ரா பேடாவை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.
ஆக்ரா பேடா செய்ய தேவையானவை
- தடியங்காய்
- சுண்ணாம்பு பவுடர்
- சர்க்கரை
- தண்ணீர்
- ஏலக்காய் தூள்
ஆக்ரா பேடா செய்முறை
- ஒரு கிலோ தடியங்காய் வாங்கி அதன் விதைகளையும், வெளிப்புற தோலையும் ஆகிய முழுமையாக நீக்க்விடவும்.
- இதை மீடியம் சைஸில் கத்தி வைத்து வெட்டுங்கள். அடுத்ததாக நாலாபுறமும் ஃபோர்க் ஸ்பூன் வைத்து ஊசி குத்துவது போல் குத்துங்கள்.
- ஏனெனில் இதை நாம் சர்க்கரை பாகில் ஊறவைப்போம்.
- ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் சுண்ணாம்பு படவுர் சேர்த்து நன்கு கலந்துவிட்டு வெட்டி வைத்த தடியங்காய் துண்டுகளை போட்டு ஊறவைக்கவும்.
- 10-12 மணி நேரம் இது நன்கு ஊறவேண்டும். அதன் பிறகு தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவவும். அப்போது தான் சுண்ணாம்பு போகும்.
- கடாயில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி தடியங்காய் துண்டுகளை போட்டு 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.
- இதை அடுப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். இனி சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும்.
- கடாயில் 300 கிராம் சர்க்கரை அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
- மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு சர்க்கரை கரைந்து கெட்டியாக மாறும் போது தடியங்காய் துண்டுகளை போடவும்.
- மீண்டும் ஒரு 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டால் சர்க்கரை பாகு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்கும்.
- கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்கலாம். இதை அப்படியே மூன்று மணி நேரத்திற்கு விட்டுவிடுங்கள்.
- சர்க்கரை பாகு தடியங்காய் துண்டுகளில் இறங்கி இருக்கும். அதன் பிறகு 4 மணி நேரத்திற்கு சாதாரணமாக உலர்த்தவும்.
- தித்திக்கும் சுவையில் ஆக்ரா பேடா தயாராகிவிடும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation