
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சட்னி சாப்பிடுவதற்கு எவ்வளவு சுவையாக இருக்கிறதோ, அவ்வளவு சுலபமாக சட்னியை செய்ய முடியும் என்பது தான். சமோசா, பக்கோடா போன்ற சில உணவுகளுடன் பரிமாறக்கூடிய தந்தூரி தக்காளி சட்னியை வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
இந்த பதிவும் உதவலாம்: கொய்யா தோலில் செய்யப்படும் சட்னி மற்றும் வறுவல் - ருசியோ ருசி!

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகள் விரும்பும் பேரிச்சம் பழ சட்னி. ஒருமுறை வீட்டில் செய்து பாருங்களேன்!!!
ஹோட்டல் கார சட்னியின் சுவையை தோற்கடிக்கும் தந்தூரி தக்காளி சட்னி
இதைச் செய்ய, முதலில் நீங்கள் 2 பெரிய தக்காளியை நன்கு கழுவி, குறைந்த சூட்டில் வாட்டி எடுக்கவும்.
தக்காளியின் தோல் மென்மையாக மாறியதும், ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை போட்டு சிறிது வதக்கவும்.
பிறகு பூண்டு, இஞ்சி போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும், கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு மசித்த தக்காளி, உப்பு போன்றவற்றைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.
உங்களுக்கு தேவையான காரசாரமான தந்தூரி தக்காளி சட்னி தயார். இட்லி, தோசை, சாதம், ரொட்டி அல்லது ஏதேனும் உணவுடன் சேர்த்து பரிமாறவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com