guava peels recipe big

கொய்யா தோலில் செய்யப்படும் சட்னி மற்றும் வறுவல் - ருசியோ ருசி!

recipe in tamil: கொய்யா தோலை வைத்து யாரும் செய்திடாத 2 அருமையான ரெசிப்பிக்களை பார்ப்போம் வாருங்கள்.
Editorial
Updated:- 2022-12-08, 17:28 IST

குளிர்காலத்தில் கிடைக்க கூடிய சில பழங்களுக்காக நாம் ஆவலுடன் காத்திருப்போம். அதில் கொய்யாப்பழமும் ஒன்று. கொய்யாவில் உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி சாப்பிடும் ருசியே தனி. கொய்யாப்பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆனால் ஒரு சிலர் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவார்கள். கொய்யாப்பழத்தின் தோல், விதை அனைத்திலும் ஊட்டச்சத்துகள் இருப்பதால் இவை உடலில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் நீக்குகிறது. மேலும் செரிமான சக்தியையும் அதிகரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் கிடைக்கும் இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.

இந்த பதிவில் கொய்யா தோலை வைத்து என்ன சமைக்கலாம் என்பதை பார்க்கப் போகிறோம். ஒன்றல்ல, இரண்டு ரெசிப்பிக்களை உங்களுக்காகப் பகிர்ந்துள்ளோம். கொய்யா தோல் சட்னி மற்றும் வறுவல் செய்முறையைப் படித்து, தெரிந்து கொள்ளுங்கள்.

கொய்யா தோல் சட்னி

guava peels recipe

நீங்கள் இதற்கு முன் பல வகையான சட்னிகளை ருசித்து இருப்பீர்கள். ஒருமுறை கொய்யா தோலில் செய்யப்படும் இந்த சட்னியையும் முயற்சித்து பாருங்கள். கண்டிப்பாக இதன் சுவை உங்களுக்குப் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்

  • கொய்யாப்பழம்- 1 கப் (நன்கு பழத்தத
  • கொய்யா தோல்கள் - 1 கப் (தோல் நீக்கிக் கழுவியது)
  • இஞ்சி - 1 டீஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
  • கருப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தழை - 1 மேஜைக்கரண்டி

செய்முறை

  • கொய்யாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். கொய்யா தோல்களை சுத்தமாகக் கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.
  • இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றவும்.
  • அடுத்ததாக இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள கொய்யா விழுது மற்றும் மசாலா விழுதை ஒன்றாக சேர்த்து தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பரிமாறுங்கள்.
  • சுவையான கொய்யா தோல் சட்னி தயார்.
  • இதை தோசை, பரோட்டா, பருப்பு சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு:கொய்யா தோல் சட்னியில் நீங்கள் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம். இது சட்னிக்கு கூடுதல் சுவை தரும்.

கொய்யா தோல் வறுவல்

guava peels recipe

இதுவரை பலவகையான காய்கறி வறுவல் ரெசிப்பிக்களை ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் படித்து இருப்பீர்கள். இந்த முறை நாம் பார்க்கப் போவது மிகவும் வித்தியாசமான கொய்யா தோல் வறுவல்.

தேவையான பொருட்கள்

  • கொய்யா தோல்கள் - 2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • கருப்பு மிளகு தூள்
  • எலுமிச்சை சாறு

செய்முறை

  • முதலில் கொய்யா தோலை பக்குவமாக நீக்கி அதைக் கழுவி உலர வைக்கவும்.
  • இந்த சமயத்தில், மைக்ரோவேவ் ஓவனை 200 டிகிரியில் வைத்து முன்கூட்டியே சூடாக்கவும்.
  • இப்போது பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல் கொய்யா தோலை நிரப்பவும். அதன் மேல் சிறிதளவு எண்ணெயைப் பிரஷ் செய்து, தேவையான அளவு உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்ப மிளகு பொடியைத் தூவவும்.
  • முன்கூட்டியே சூடுப்படுத்தப்பட்ட ஓவனில், பேக்கிங் ட்ரேயை 5 நிமிடம் வைக்கவும்.
  • கொய்யா தோலின் இருபுறமும் நன்கு மொறுமொறுவென வறுபட்டவுடன், கடைசியாக அதன் மேலே சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறலாம். சுவையான கொய்யா தோல் வறுவல் தயார்.

குறிப்பு: ஓவன் இல்லாதவர்கள் மாசாலா தூவி தயார் செய்த கொய்யா தோல்களை எண்ணெயில் போட்டும் பொரித்தும் எடுக்கலாம்.

guava peels recipe

கொய்யா தோல்களை வைத்து சட்னி மற்றும் வறுவலை சுலபமாக செய்திடலாம். இதை கண்டிப்பாக நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik, google, herzindagi

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com