date chutney big

குழந்தைகள் விரும்பும் பேரிச்சம் பழ சட்னி. ஒருமுறை வீட்டில் செய்து பாருங்களேன்!!!

recipe in tamil: பேரிச்சம் பழங்களை வைத்து ஆரோக்கியமான சட்னி தயாரிக்கும் முறையைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.<img src="//images.herzindagi.info/image/2022/Dec/date_chutney_03.jpg" alt="date chutney " />
Editorial
Updated:- 2022-12-08, 17:28 IST

இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் என வெவ்வேறு சுவை கொண்ட சட்னி வகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன. காய்கறிகளை வைத்து மட்டுமல்ல உலர் பழங்களிலும் சட்னி அரைக்கப்படுகிறது. குளிர்காலத்தில் உலர் பழங்களைச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றுள் பேரீச்சம்பழம் மிகவும் சுவையானதும் கூட. உங்களுக்குப் பேரிச்சம்பழம் பிடிக்குமா? பெரும்பாலும், இதை கீர், ஷேக், புட்டிங் அல்லது எதாவது இனிப்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டு இருப்பீர்கள். இனிப்பு உணவுகளில் பேரிச்சம்பழத்தை துருவி அல்லது நறுக்கி சேர்ப்பது உணவின் சுவையைக் கூட்டுகிறது.

இதை தவிர, நீங்கள் எப்போதாவது பேரிச்சம் பழ சட்னி சாப்பிட்டிருக்கிறீர்களா? தற்போது உங்கள் மனதில், பேரிச்சம் பழத்தில் சட்னி செய்ய முடியுமா? என்ற கேள்வி எழலாம். எல்லாவற்றையும் சட்னியாக மாற்றுவது பெண்களாகிய நமக்குக் கைவந்த கலை ஆயிற்றே! இதுவரை பேரீச்சம்பழ சட்னியை சாப்பிடாதவர்கள் உங்கள் வீட்டில் இதை கட்டாயம் செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னியை இரண்டு விதங்களில் செய்யலாம். இந்த 2 செய்முறைகளையும் இப்பதிவில் பார்க்கலாம்.

இனிப்பு – புளிப்பு சுவை சட்னி

இனிப்பு சுவையுடைய பேரிச்சம்பழத்தை மட்டும் பயன்படுத்தி சட்னி அரைத்தால் அது சுவையாக இருக்காது. பேரிச்சம் பழத்துடன் ஒரு சில பொருட்களை சேர்த்து சட்னி செய்யும்போது, அதன் சுவை அற்புதமாக இருக்கும். இனிப்பு – புளிப்பு சுவை நிறைந்த இந்த சட்னியின் செய்முறை பின்வருமாறு:-

தேவையான பொருட்கள்

date chutney

  • பேரிச்சம்பழம் - 200 கிராம்
  • சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
  • புளி - 20 கிராம்
  • உப்பு - தேவையான அளவு
  • சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பேரிச்சம்பழத்தை ஊற வைக்கவும். அதே போல் மற்றொரு பாத்திரத்தில் புளியுடன் தண்ணீர் ஊற்றி அதை 3-4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • இப்போது ஊறிய பேரிச்சம்பழத்தில் இருக்கும் கொட்டைகளை நீக்கி, அதை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். கலவை கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • அடுத்து அடுப்பில் கடாயை வைத்து அது சூடானதும் அரைத்த பேரிச்சம் பழ விழுது, 1 டீஸ்பூன் சுக்கு பொடி, புளி கரைசல் மற்றும் 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து, சட்னியை 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • அவ்வளவு தான் இனிப்பு-புளிப்பு சுவை நிறைந்த பேரீச்சம்பழ சட்னி தயார்.
  • இதை பானிபூரி, சமோசா அல்லது பிரெட் பக்கோடாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு: சிவப்பு மிளகாய் தூள் காரம் நிறைந்தது. ஆகையால், இந்த சட்னியை குழந்தைகளுக்குக் கொடுத்தப்பதாக இருந்தால் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூளை பயன்படுத்தலாம். இதில் காரம் குறைவு மற்றும் சட்னிக்கும் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

எலுமிச்சை பேரிச்சம்பழ சட்னி

date chutney

பெரும்பாலான உணவுகளில் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. சுவையற்ற உணவில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறை சேர்த்தால் போதும் அதன் சுவை கூடி விடும். எலுமிச்சை பேரிச்சம்பழ சட்னியை எப்போதாவது சாப்பிட்டிருக்கிறீர்களா?? இது மிகவும் புதுமையானது.

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை - 1
  • பேரிச்சம்பழம் - 100 கிராம்
  • உலர்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பேரீச்சம்பழத்தை சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • நன்கு ஊறியதும் அதிலிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு பேரிச்சம்பழத்தை மட்டும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
  • இதில் 1 எலுமிச்சை பழத்தின் சாறு, 1 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • எலுமிச்சை பேரிச்சம்பழம் சட்னி இப்போது தயார்.

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை

  • சட்னியில் சரியான அளவில் உப்பு சேர்க்க வேண்டும். ஒருவேளை உப்பு அதிகமாகி விட்டால் சட்னியின் மொத்த சுவையும் மாறிவிடும்.
  • இந்த சட்னியை எண்ணெயில் வதக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • சட்னி அரைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்த்து விடக் கூடாது. கெட்டியான பதத்தில் சரியான அளவுகளுடன் சட்னியை அரைக்க வேண்டும். தண்ணீர் அதிகமானால் இஞ்சி சட்னி போல் மாறிவிடும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com