கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க பானகம் ஒரு சிறந்த பாரம்பரிய பானம் ஆகும். இது சர்க்கரை, இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான பானம். வெயில் காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள இது ஒரு சிறந்த தேர்வு. உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன், டாக்ஸின்களை வெளியேற்றவும் இந்த பானகம் உதவுகிறது. இந்த சூடான கோடை நாட்களில் பானகத்தை தினமும் குடித்தால் உடலில் நீரிழப்பு, தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த வெயில் காலத்தில் டீ, காபி, சோடா, குளிர் பானங்கள் குடிப்பதற்கு பதிலாக இந்த பானகத்தை குடிக்கலாம். அந்த வரிசையில் வீட்டிலேயே பானகம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை எடுத்து, அதில் 1 கப் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கரைய விடவும். இப்போது அதில் சிறிய துண்டு இஞ்சியை அரைத்து, எலுமிச்சை சாறு, கர்ப்பூரம் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும். 2 மணி நேரம் இந்த பானத்தை பிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும். அவ்வளவு தான் சுவையான பானகம் தயார். இந்த பானகத்தை ஒரு கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லுனு கோடை வெயிலுக்கு குடித்து பாருங்க.
கோடை காலத்தில் இந்த பானகத்தை குடிப்பதால் நம் உடல் வெப்பத்தை குறைக்கும், உணவு ஜீரணத்திற்கு உதவும், உடல் ஆற்றலை அதிகரிக்கும், வெப்பத்தினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும். அதே போல கோடை காலத்தில் வீட்டில் எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த பானகத்தை தினமும் குடித்து வந்தால், வெயிலின் தாக்கத்தை ஈசியாக சமாளிக்கலாம். இந்த பாரம்பரிய பானத்தில் வெல்லம் பயன்படுத்தினால் மேலும் ஆரோக்கியமாக இருக்கும். இதை நீங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com