herzindagi
image

Banana Walnut Payasam Recipe: சுவையான வாழைப்பழ பாயாசம்; வீட்டில் செய்து பாருங்க ரெசிபி இதோ

பால் பாயாசம், சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம் என்று நம் தமிழர் கலாச்சாரத்தில் பல வகை பாயாசத்தை சமைத்து சாப்பிடுவார்கள். அந்த வரிசையில் இன்று கொஞ்சம் வித்தியாசமாக ஆரோக்கியமான அதே சமயம் சுவையாகவும் இருக்கும் வாழைப்பழம் அக்ரூட் பாயாசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-04-07, 17:34 IST

இந்திய வீடுகளில் பெரும்பாலான கல்யாண நிகழ்ச்சிகளிலும் விசேஷங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான இனிப்பு இந்த பாயாசம். வாழை இலை விருந்து என்று வந்தாலே அதன் இறுதியில் பாயாசம் இருந்தால் தான் வயிறு நிறைய சாப்பிட ஒரு உணர்வு பலருக்கும் கிடைக்கும். பால் பாயாசம், சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம் என்று நம் தமிழர் கலாச்சாரத்தில் பல வகை பாயாசத்தை சமைத்து சாப்பிடுவார்கள். அந்த வரிசையில் இன்று கொஞ்சம் வித்தியாசமாக ஆரோக்கியமான அதே சமயம் சுவையாகவும் இருக்கும் வாழைப்பழம் அக்ரூட் பாயாசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுவையான வாழைப்பழ பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

 

  • 2 பழுத்த வாழைப்பழங்கள் (பொடியாக நறுக்கியது)
  • 1/4 கப் அக்ரூட் பருப்பு
  • 1/2 கப் பாசுமதி அரிசி
  • 4 கப் பால்
  • 1/2 கப் வெல்லம் (அல்லது சர்க்கரை)
  • 2 தேக்கரண்டி நெய்
  • 4 - 5 ஏலக்காய் (நறுக்கியது)
  • 10-12 முந்திருப்பருப்பு மற்றும் திராட்சை (அலங்கரிக்க)
  • ஒரு சிட்டிகை குங்குமப்பூ (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ள)

சுவையான வாழைப்பழ பாயாசம் ரெசிபி:


முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அரிசியை தனியாக வடிகட்டவும். இப்போது வெல்லத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். இதற்கு பிறகு கனமான அடிப்பகுதி உள்ள வாணலியில், 1 தேக்கரண்டி நெய் ஊற்றி, நறுக்கிய அக்ரூட் பருப்புகளை 2 நிமிடங்கள் லேசாக வறுக்கவும். இந்த வதக்கிய பருப்புகளை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இப்போது இதே வாணலியில், மசித்த வாழைப்பழங்களைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.

close-up-bowl-banana-walnut-kheer-garnished-with-sliced-bananas-chopped-walnuts_1234738-39756

இதனை அடுத்து வேகவைத்த அரிசியை இத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதற்கு பிறகு 4 கப் பால் ஊற்றி, கட்டிகளைத் தவிர்க்க தொடர்ந்து கிளற வேண்டும். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க 10-12 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் வைத்து சமைக்கவும். இப்போது வெல்லம் (அல்லது சர்க்கரை) சேர்த்து முழுமையாக கரைக்கும் வரை கிளறவும். நறுமணத்திற்காக பொடியாக நறுக்கிய ஏலக்காய் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலக்கவும். இந்த பாயாசம் திக்காக மாறும் வரை மேலும் 5 நிமிடங்கள் சமைத்து அடுப்பை ஆப் செய்து விடுங்கள். இதை ஒரு ஓரம் எடுத்து வைத்து விட்டு ஒரு சிறிய வாணலியில், 1 தேக்கரண்டி நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சைகளை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த அக்ரூட் பருப்புகள் மற்றும் வறுத்த முந்திரி திராட்சைகளை பாயசத்தில் சேர்த்து சூடாக பரிமாறினால் சுவையான வாழைப்பழ பாயாசம் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாயாசத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com